தரகர்களிடமும் வௌிநாட்டு முகவர் நிறுவனங்களிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் வீட்டுப் பணியாளர்கள்!

தரகர்களிடமும் வௌிநாட்டு முகவர் நிறுவனங்களிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் வீட்டுப் பணியாளர்கள்!

அண்மையில் நாம் கவலைக்கிடமான செய்தியொன்றை அறிந்து கொள்ள நேரிட்டது. ஆனாலும் இது போன்ற செய்தியொன்றை நாம் அறிந்த கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல.

அடிக்கடி இவ்வாறான செய்திகளைக் கேட்க நேரிட்டுள்ளதுடன் அவ்வாறான அனுபவங்களுக்கு முகங்கொடுத்தவர்களையும் நாம் சந்தித்துள்ளோம். நாம் கூறப்போகும் சம்பவத்திற்கு முகங்கொடுத்தது ஹட்டன் பிரதேசத்தினைச் சேர்ந்த நான்கு வீட்டுப் பணிப்பெண்களாவர். வீட்டுப் பணிக்காக தொழிலாளர்களைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு தரகரின் மூலமாக கொழும்பிலுள்ள வீடுகளில் வீட்டுப் பணியாளர்களாகச் சேரும் எதிர்பார்ப்புடன் கொழுப்பிற்கு வந்துள்ள அவர்களுக்கு இறுதியில் தம்மை தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு கொழும்பிற்கு வரவழைத்த தரகரைக் கூட சந்திக்க முடியாமற் போயுள்ளது. கொழும்பிற்கு வந்தவர்கள் தரகரை தொலைபேசியினூடாகத் தொடர்பு கொள்ள எவ்வளவு முயற்சித்த போதும் அது கைகூடவில்லை. இரவு நெடுநேரம் கழித்து தரகர் தொலைபேசி அழைப்பிற்கு மறுமொழி தந்த போதும் அவர் அச்சமயத்தில் குடிபோதையில் இருந்துள்ளமையினால் குறித்த சம்பவம் பற்றி அவர்களுக்கு தௌிவான பதிலொன்று கிடைத்திருக்கவில்லை. இறுதியில் அப்பெண்கள் நால்வரும் தமக்கு அறிமுகமில்லாத கொழும்பு நகரின் வீதிகளில் அலைந்து திரிந்து இரவைக் கழித்தபின்னர் மறுநாள் வெறுங்கையுடனேயே தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு வீட்டுப் பணியாளர்களை வீட்டுரிமையாளர்களிடம் அறிமுகப்படுத்துகின்ற தரகர்களும் நிறுவனங்களும் உள்ளன என்பதனை நாமறிவோம். இதன் போது பெருந்தோட்டங்களில் வாழ்கின்றவர்கள் வீட்டுப் பணியாளர்களாக தரகர்களின் ஊடாக செல்கின்றமையினை சுலபமாகக் காண முடியும். அதற்குக் காரணமாக அவர்கள் சொல்கின்ற விடயம் யாதெனில், தோட்டப்புறத்தில் இருந்து கொழும்பிற்கு வரும் போது ஏற்படுகின்ற போக்குவரத்துச் செலவினங்கள், உணவிற்கான செலவினங்கள் போன்றவற்றை குறித்த தரகர்கள் ஏற்றுக் கொள்கின்றமை போன்ற காரணங்களாகும். இவ்வாறான காரணங்களுக்கு இணங்கி கொழும்பு நகரில் வீட்டுப் பணியாளர்களாக ஆகும் எதிர்பார்ப்புடன் வருகின்றவர்களிடம் தரகர்கள் குறிப்பிடுவது யாதெனில், குறித்த வீடுகளில் சிறு வேலைகளுக்காகவே அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றாகும். ஆனாலும் பெரும்பாலான வீடுகளில் குறிப்பிட்ட நேரமோ அல்லது குறிப்பிட்ட வேலைகளோ என்று இருப்பதில்லை. இருப்பது தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வேலைப்பழுவாகும். ஒருசில இடங்களில் அவர்கள் மனதளவிலும், உடல் ரீதியாகவும் அல்லது பாலியல் ரீதியாகவும் கூட துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றமையினை அறியக்கூடியதாகவுள்ளது.

இதன் போது ஒருசில சந்தர்ப்பங்களில் குறித்த வீட்டுப் பணியாளர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்படும் சம்பளம் வீட்டுப் பணியாளர்களினால் வழங்கப்படாத சந்தர்ப்பங்கள் குறித்தும் அறியக்கிடைக்கின்றது. அவ்வாறு தரகர்களினூடாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் ஒருசில வீட்டுப் பணியாளர்களின் சம்பளங்கள் குறித்த தரகர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படுவதுடன் குறித்த வீட்டுப் பணியாளர்களுக்கான சம்பளம் அந்த தரகர்களினாலேயே செலுத்தப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது வீட்டுப் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை தரகர்கள் திருடிக்கொள்ளும் சம்பவங்கள் குறித்தும் அறியப்படுகின்றது. வீட்டுப் பணியாளர்கள் தொழிலில் இணைத்துக் கொள்ளும் சமயத்தில் சம்பளம், வேலை நேரம் மற்றும் அவர்களுக்குரிய வேலைகள் என்பன பற்றி குறிப்பிடப்படுகின்ற யாதேனும் ஆவணங்கள் இன்மையினாலே அவர்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுகின்றது. அவ்வாறே யாதேனும் சந்தர்ப்பங்களில் வீடுகளில் வைத்து வீட்டுப் பணியாளர்களுக்கு ஏற்படுகின்ற விபத்துக்கள், துன்புறுத்தல்களின் போது தரகர்களும் கூட அமைதியாக இருந்து விடுவதுடன், அவற்றையெல்லாம் குறித்த வீட்டுப் பணியாளர்களே தனித்து தாங்கிக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு உள்ளாகின்றனர்.

அண்மையில் நாம் அறிந்து கொண்ட மிகவும் கவலைக்கிடமான செய்தியான சிறுமி ஹிஷாலியின் சம்பவத்தின் போதும் தரகரின் நடவடிக்கைகளுக்கும் இதற்கும் வேறுபாடுகள் ஏதுமில்லை. பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் வீட்டுக்கு ஹிஷாலினியை அனுப்பிவைத்து, அவரது சம்பளத்தினைப் பெற்றுக் கொண்டிருப்பதும் கூட குறித்த தரகராவார்.

இவ்வாறான நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தும் போது இவ்வாறான சம்பவங்களை சட்டரீதியான உட்படுத்தும் கட்டாய தேவை ஏற்படுகின்றது. ஏனெனில் தற்சமயம் நாடு பூராவும் வீட்டுப் பணியாளர்களை விநியோகிக்கும் முகவர் நிறுவனங்களும், நோயாளிகளைக் கவனித்துக் கொள்பவர்களை விநியோகிக்கும் முகவர் நிறுவனங்களும், துப்புறவு செய்பவர்களை விநியோகிக்கும் முகவர் நிறுவனங்களும் துரிதமாக பரவி வருகின்றன. வௌிநாட்டு தொழில்வாய்ப்பு முகவர் நிறுவனங்களை நாட்டினுள்ளே பரவலாகக் கண்டுகொள்ள முடிவதுடன் அவற்றுக்கு நிகராக இந்த முகவர் நிறுவனங்களும் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன என்று விளங்குகின்றது. ஆனாலும் இந்த முகவர் நிறுவனங்களோ அல்லது தரகர்களோ அரசாங்கத்தினால் அல்லது பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களினால் சட்டரீதியான ஒழுங்குவிதிகளுக்கு உட்படுவதைக் காண முடிவதில்லை.

அதற்கமைய, இந்த தரகு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பொறுப்புவாய்ந்த அமைச்சின் கீழ் அல்லது திணைக்களம் ஒன்றில் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு அவர்களினால் யாதேனும் பணியாளர் ஒருவர் வீட்டுரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் போது குறித்த தரப்பும் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாகின்ற விதத்தில் வௌிப்படைத்தன்மையுடன் கூடிய சட்டரீதியான கட்டமைப்பிற்குள் உள்ளடக்கப்பட வேண்டும். மேலும் குறித்த பணியாளர்களுக்கு சேவை இடத்தில் யாதேனும் விபத்து நேரும் பட்சத்தில் அதற்கான நஷ்ட ஈட்டைச் செலுத்த வேண்டிய வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட வேண்டும். எவ்வித துன்புறுத்தல்களுக்கும் அல்லது வன்முறைகளுக்கும் உட்படுத்தப்படக்கூடாது. இவ்வாறாக வௌிப்படைத்தன்மையுடனான நிச்சயமான சட்டரீதியான நடைமுறையின் ஊடாக வீட்டுப் பணியாளர்கள் தொழிலுக்கு அனுப்பிவைக்கப்படும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையான நிபந்தனையாக இணங்கிய சம்பளம், விடுமுறைகள், மேலதிக நேரம், வேலை செய்யும் நேரம், நஷ்ட ஈடு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட சிறந்த தொழில் நிபந்தனைகள் உள்ளடங்கிய சேவை ஒப்பந்தம் மூலம் குறித்த தொழிலாளர்களும் அவர்களை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களும் எனும் தரப்புக்கள் உள்ளடக்கப்பட வேண்டும். இதன் போது சேவையில் ஈடுபடுத்தப்படும் நபர்கள் என்பதற்குள் வீட்டுரிமையாளர் அல்லது தரகு நிறுவனம் அல்லது தரகர் எனும் அனைவரும் உள்ளடக்கப்பட வேண்டும்.

வீட்டுப் பணியாளர்களுக்கு நாட்டில் காணப்படுகின்ற தொழிலாளர் சட்டங்களின் மூலம் காப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் C189 சாசனம் நாட்டினுள்ளே செயற்படுத்தப்பட்டு வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான நிலைமையினுள்ளே வீட்டுப் பணியாளர்களுக்கும் கண்ணியமான, சிறந்த தொழில் நிபந்தனை அனுபவித்திட சந்தர்ப்பம் கிடைப்பதுடன் மோசடிக்கார தரகர்கள் மற்றும் முகவர் நிலையங்களின் ஊடாக வீட்டுப் பணியாளர்கள் விற்பனை செய்யப்படும் செயற்பாட்டிற்கு அல்லது சம்பள மோசடிகளுக்கு பலியாக வேண்டியதில்லை.

வீட்டுப் பணியாளர்களே, மோசடிக்கார தரகர்களிடமிருந்து பாதுகாப்பாகவிருங்கள் !

ப்ரொடெக்ட் சங்கம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image