வீட்டுப் பணியாளர்கள் பற்றி அரசாங்கத்திற்கு கவலையில்லை. - எதிர்க்கட்சிகளுக்கு ஞாபகம் வருவது தேர்தல் காலத்தில் மாத்திரமா?

வீட்டுப் பணியாளர்கள் பற்றி அரசாங்கத்திற்கு கவலையில்லை. - எதிர்க்கட்சிகளுக்கு ஞாபகம் வருவது தேர்தல் காலத்தில் மாத்திரமா?

"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக ஒட்டு மொத்த சமுதாயத்தினையும் சுபீட்சத்தினை நோக்கி கொண்டு செல்வதாய் அன்று தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்கிய ஜனாதிபதியும்  தற்போதைய அரசாங்கமும் தற்சமயம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள சுபீட்சம் எவ்வாறானது என்று புதிதாகக் கூறத்தேவையில்லை.

தற்சமயம் வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட அன்றாட வயிற்றுப்பாட்டைப் போக்கிக் கொள்கின்ற முறையில்லாப் பிரிவின் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக சுவற்றில் வைத்து நெருக்கப்படுமளவிற்கு அந்த சுபீட்சமான நடவடிக்கை தோல்வியுற்றுள்ளது என்று நிரூபணமாகியுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் தமது கொள்கைப் பிரகடனத்திலேனும் வீட்டுப் பணியாளர்களுக்கான இடத்தினை ஒதுக்கிக் கொடுக்க முடியாமையே "வீட்டுப் பணியாளர்கள்" அரசாங்கத்தினால் வேண்டுமென்றே கவனிக்காமற் விடப்படுகின்றனர் என்பதற்குச் சிறந்த உதாரணமாகும்.

அப்படி கவனிக்காமற் விடப்படுவதன் பலன் யாதெனில், இன்று வீட்டுப் பணியாளர்கள் அன்றாடம் தேவைப்படுகின்ற பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாமல், பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாமல், தேவையான மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். இது வேண்டுமென்றே இழைக்கப்பட அநீதி என்றே நாம் சொல்கின்றோம். அந்த தவறைச் சரிசெய்ய அரசாங்கத்திடம் எவ்வித வேலைத்திட்டமும் இல்லை. அதே போல அரசாங்கத்திற்கு தேவையும் இல்லை.

சஜித் பிரேமதாசவின் "ஒன்றிணைந்து முன்னோக்கி" கொள்கைப் பிரகடனத்தினுள்ளே வீட்டுப் பணியாளர்களுக்கான வேலைத்திட்டம் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது என்று அப்படியானால் யாராவது சொல்ல முடியும். "ஆம்.!" அந்த கொள்கைப் பிரகடனத்தின் 69வது பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. "நாம் விவசாயம், மீன்பிடி, அருங்கலைகள் துறை ஊழியர்கள், வீட்டுப் பணியாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கலைஞர்கள் போன்ற முறையில்லாப் பிரிவுகளில் தொழில் புரிகின்றவர்களுக்காக பங்களிப்பு ஓய்வூதியக் கொடுப்பனவொன்றை அறிமுகம் செய்வோம்". ஆனாலும் இதனை வேலைத்திட்டம் என்று ஏற்றுக் கொள்ளுமளவிற்கு காரணிகள் சஜித் பிரேமதாசவின் கொள்கைப் பிரகடனத்தில் விபரிக்கப்படவில்லை.

ஆனாலும் 2020 பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு சமகி பெண்கள் சக்தி முன்வைத்த "திறமைமிக்கப் பெண்" என்ற பெண்களுக்கான வேலைத்திட்டத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

• "சுயதொழில்களில் ஈடுபடுகின்ற மற்றும் வீட்டுப் பணியில் ஈடுபடுகின்ற பெண்கள் உள்ளிட்ட முறையில்லாப் பிரிவில் தொழில் புரிகின்ற அனைத்துப் பெண்களுக்கும் காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்."
• முறையில்லாப் பிரிவில் தொழில் புரிகின்ற பெண்களின் தொழில்கள் மற்றும் உரிமைகள் தொழிலாளர் சட்டங்களினுள்ளே பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• "பெண்கள் உழைப்புச் சந்தையினுள்ளே செயற்படுகின்ற அனைத்து மட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்களின் (கிராமிய, தோட்டப்புற, உப ஒப்பந்தங்கள், வீட்டில் உள்ள) அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படுகின்ற சர்வதேச அமைப்புக்களின் கொள்கைகளுக்கு இணங்கச் செயற்படுதல் கட்டாயமாக்கப்படும்"
• "வீட்டுப் பணி, விவசாயம், தோட்டப் பிரிவு உள்ளிட்ட முறையில்லாப் பிரிவுகளில் தொழில் புரிகின்ற பெண்களுக்கு ஆண்களுக்குச் சமனான சம்பள உரிமையானது புதிய சட்டங்கள் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும்."
திறமையுள்ள பெண் பக்கம் 01

 உண்மையிலேயே இந்த பரிந்துரைகள் வீட்டுப் பணியாளர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தினை தூக்கி நிறுத்த முன்னேற்றகரமான தலையீட்டினைச் செய்யும் என்று நாம் நம்பினோம்.

ஆனாலும் இங்குள்ள பிரச்சினை என்னவெனில், சஜித் பிரேமதாசவாகட்டும், சமகி மக்கள் சக்தியாகட்டும் அல்லது சமகி பெண்கள் சக்தியாகட்டும் யாராகவிருந்தாலும் தேர்தலின் பின்னர் இரண்டு வருடங்கள் கடந்தாலும் குறைந்தபட்சம் இது வரை தாம் பரிந்துரைத்த கொள்கைகளுக்காக ஒரு வார்த்தையேனும் கதைத்தமையினைக் காணமுடியவில்லை. அதற்கமைய, இந்த அரசாங்கம் வீட்டுப் பணியாளர்களை வேண்டுமென்றே தவிர்த்ததைப் போன்றே சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியும் வீட்டுப் பணியாளர்களுக்காக இந்த வேலைத்திட்டத்தினைப் பரிந்துரைத்தது அப்பாவி வீட்டுப் பணியாளர்களின் வாக்குகளை கொள்ளையிடும் சுயநலமிக்க தேவைக்காகவா என்ற பிரச்சினை எம்மெதிரே உள்ளது.

ப்ரொடெக்ட் தொழிற்சங்கம்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image