உலக கண்ணியமான வேலைக்கான தினம்!

உலக கண்ணியமான வேலைக்கான தினம்!

இன்று உலக கண்ணியமான வேலைக்கான தினமாகும் (World Day for Decent Work) ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி உலக கண்ணியமான தொழிலுக்கான தினமாக கொண்டாடப்படுகிறது.

தொழில்வாய்ப்புக்களை அரசாங்கங்கள் உருவாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளிலேயே தொழிற்சங்கங்கள் இவ்வாண்டுக்கான உலக கண்ணியமான வேலைக்கான தினத்தை கொண்டாடுகின்றன. இதனூடாக , இந்த திட்டங்கள், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் மற்றும் மற்றவர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பூஜ்ஜிய கார்பன் பொருளாதாரத்தின் குறிக்கோளுடன் புதிய வேலைகள் காலநிலைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதை தௌிவுபடுத்தும் நோக்கிலேயே இவ்வாண்டுக்கான இத்தொனிப்பொருள் அமைந்துள்ளது.

தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொவிட் 19 தொற்று காரணமாக 200 மில்லியனுக்கும் அதிமானவர்கள் தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ளனர். இன்னும் நூறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொழில்வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் ஆவர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதமான உதவியும் இன்றி தொழிற்சந்தையில் கைவிடப்பட்டநிலையில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய கண்ணியமான வேலைத்தினத்தில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கங்கள் முன்வரவேண்டும் என்பதே தொனிப்பொருளின் நோக்கமாகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) வரைவிலக்கத்தின்படி, ஒழுக்கமான வேலை என்பது உற்பத்தி செய்யும் வேலைக்கான வாய்ப்புகள் மற்றும் நியாயமான வருமானம், பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பு, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு, சுதந்திரத்திற்கான சிறந்த வாய்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

வேலைத் திட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு (ITUC) 2030 க்குள் 575 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என அடையாளங்கண்டுள்ளது. இது பாதி தீர்வாகவே பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு பில்லியன் முறைசாரா வேலைகளை முறைப்படுத்துவதன் மூலம் உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தொழில் என்ற சிக்கலை தீர்க்க முடியும். -ஊக்கத்தொகை மற்றும் வலுவான ஒழுக்க கட்டுப்பாடுகள் உள்ளடக்கப்பட்டதாக அமுலாக்கப்படவேண்டும் என்றும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டக்காட்டியுள்ளது.

தற்போது அரசாங்கங்கள் முன்னுரிமையளிக்கவேண்டிய ஒரே விடயம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதேயாகும். முழு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். சமூக நீதிக்கான பொருளாதார பாதுகாப்பு அடிப்படையினை இது ஏற்படுத்தும். இதுவே ஐநாவின் நிலையான வளர்ச்சியின் 8 இலக்குகளை அடைய ஒரே வழியாகும்.

SDG8

தொழில்வழங்குநர்கள் உட்பட உரிய தரப்பினர்களுடன் வட்ட மேசை கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு தொழில்வாய்ப்புக்களை அவசரமாக உருவாக்க முன்வருமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன. அவ்வாறு உருவாக்கப்படும் தொழில்வாய்ப்புகள் காலநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாததாகவும் நிலையான தன்மையுடையதாகவும் கார்பன் அற்ற பொருளாதார பங்களிப்பை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷரான் பர்ரோவ் ( Sharan Burrow) சுட்டிக்காட்டியுள்ளார்.

"மிக முக்கியமான பராமரிப்புத் துறை மற்றும் உள்கட்டமைப்பில் வேலைவாய்ப்பில் வலுவான கவனம் இருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் வரியைத் தவிர்ப்பதன் மூலம் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைப் பதுக்கி வைக்க வடிவமைக்கப்பட்டதற்குப் பதிலாக சமமான வரி கொள்கைகளை அரசுகள் பின்பற்றினால், எங்கள் வேலை தேவை அடையக்கூடியது. அந்த வருவாய் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்கிறார் அவர்.

 புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் போது நல்ல தொழில்வாய்ப்புகளை வெற்றிகரமாக உருவாக்க உள்ளடக்கப்படவேண்டிய விடயங்களை சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு பட்டியல்படுத்தியுள்ளது.

அவையாவன, உள்நாட்டு தொழில்களை ஆதரித்து வலுப்படுத்தப்பட்ட தொழில்துறை கொள்கை, காலநிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில்களுக்கான முதலீடுகளை அரசாங்கம் மேற்கொள்ளல்,அரசதுறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் நேரடியாக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், ஒழுக்கமான, நிச்சயமான கண்ணியமான வேலைகளை ஊக்குவிக்கும் வகையான திட்டங்கள், வேலைத் திட்டங்களை அபிவிருத்தி செய்யும் திட்டங்களில் தொழிற்சங்கங்களின் முழுமையான பங்களிப்பை பெற்றுக்கொள்ளல் அரசதுறை முதலீட்டு விசை, ITUC இன் பிரச்சார சுருக்கமானது வேலைகளை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று பொதுச் சேவைகளில் முதலீடு செய்வதையும் தெளிவுபடுத்துகிறது. பொதுச்சேவைக்கான செலவீனமானது நேர்மறைான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதும் அதற்கு மேலதிகமாக அனைவருக்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவதாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"உலகளாவிய தொழிலாளர் சந்தை தற்போது சிதைந்துள்ளது. அரசாங்கங்கள் வேலையை ஒழுங்குபடுத்த தவறிவிட்டன மற்றும் முழு வேலைவாய்ப்பின் நோக்கத்தை இழந்துவிட்டன. கொவிட் பரவலுக்கு முன்பு இருந்ததை விட வேலை இன்னும் ஆபத்தானது, மேலும் இது வளர்ந்து வரும் சுரண்டல் மற்றும் பரவலான பாதுகாப்பின்மையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு சட்டவிதிகளை மாற்றியமைக்க வேண்டும்.

 தொற்றுநோய் மற்றும் ஏனைய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உலகளாவிய ரீதியில் தேவையான நெகிழ்ச்சியை உருவாக்குவதற்கும் மீட்புக்கும் வேலைகள் என்பவற்றை முற்றிலும் மையமாக கொண்ட தொழில்வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழில்வாய்ப்புக்களை உரிமைகள், சமூகப் பாதுகாப்பு, சமத்துவம் ஆகியவற்றுடன் புதிய சமூக ஒப்பந்தத்தின் வேலைவாய்ப்பு உருவாக்கம் மையமானது. இன்றைய கண்ணியமான வேலைக்கான தினமாக அழைப்பதை அர்த்தப்படும் என்றும் ஷரோன் பர்ரோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பினால் 2008ம் உலக கண்ணிய தினத்திற்கான தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் தொழிற்சங்கங்களின் சாதனைகளைக் கொண்டாடும் மற்றும் நமது ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்காக தியாகம் செய்தவர்களின் வேலையை மதிப்பதற்கான நாளாக உலக கண்ணிய வேலைக்கான தினம் அமைந்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image