இந்த முயற்சியை நாம் எவ்வாறு சமூகத்திற்கு கொண்டு செல்வது?

இந்த முயற்சியை நாம் எவ்வாறு சமூகத்திற்கு கொண்டு செல்வது?
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செம்மஞ்சள் நிற ஒளி விளக்கேற்றி ஒளிர விடப்பட்டது. 
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது கருத்து தெரிவித்த ஸ்டேண்ட்அப் மூமன்ட் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதி அஷீலா தந்தெனிய,
 
பெண்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம். இதுபோன்ற ஒரு முயற்சி எடுத்தமை தொடர்பிலும், இந்த செய்தியை முன்னோக்கி சமூகத்திற்கு கொண்டுசெல்வதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கும் நாம் ஐக்கிய மக்கள் சக்திக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
 
நாட்டில் நடக்கின்ற துன்புறுத்தல்கள், சமூகத்தில், குடும்பத்தில், அரசியலில் தற்போது இந்த வன்முறைகளை தடுப்பதற்கு அல்லது அது தொடர்பில் ஏதேனும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கும் இந்த 16 நாட்கள் என்ற வேலைத்திட்டம் போதுமானது அல்ல என்பதை நாம் அறிவோம்.
 
எனினும் இந்த முயற்சியை நாம் பெரிதும் மதிக்கின்றோம். இந்த முயற்சியை நாம் எவ்வாறு சமூகத்திற்கு கொண்டு செல்வது, மண்ணில் எவ்வாறு இதனை விதைப்பது என்பது தொடர்பில் சிந்திப்பதற்கு இது எமக்கு மிகவும் சிறந்த சந்தர்ப்பமாகும் என்று நான் நினைக்கின்றேன்.
 
குறிப்பாக அரசியலில் பெண்கள் முகம்கொடுக்கும் வன்முறைகள், அவர்களுக்கு வெளிப்படையாகவே இடம்பெறும் வன்முறைகள் என்பனவற்றை இல்லாது ஒழிப்பதற்கு நாம் செயற்படவேண்டும். இதற்காக நாம் கைகோர்க்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image