பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் வழிநடத்துகின்றன

பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் வழிநடத்துகின்றன

'பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் வழிநடத்துகின்றன' (Victims' Voices Lead the Way)  

என்பது 2021ம் ஆண்டுக்கான ஆட்கடத்தலுக்கு எதிரான உலகத் தினத்தின் தொனிப்பொருளாகும்.

உலகின் மூன்றாவது பாரிய சட்டவிரோத வியாபாரமான ஆட்கடத்தலினால் ஆண்டுதோறும் உலகளவில் 20 - 40 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர். மிக இலாபகரமான தொழிலாளாக இது பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் 150 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் மனிதக்கடத்தலினூடாக பெறப்படுவதாக சுட்டக்காட்டப்பட்டுள்ளது.

நாடுகளின் எல்லைகளில் நடைபெறும் இச்சட்டவிரோத வியாபாரமானது திட்டமிடப்பட்ட குற்றமாகும். மனிதக்கடத்தலில் ஆண்டு தோறும் 71 வீத பெண்களும் 29 வீத ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர் என 2020ஆம் ஆண்டின் ஐநா ஆய்வு தெரிவிக்கிறது.

2013ம் ஆம் ஆண்டு ஜூலை 30 மனிதக் கடத்தல் எதிர்ப்புத் தினமாக ஐனாவினால் பிரகடனப்படுத்தப்பட்டது. மிக வேகமாக வளர்ந்துவரும் சட்டவிரோதத்துறையான மனிதக் கடத்தலினால் (modern slavery) உருவாகும் அபாயம் தோன்றியுள்ளது.

மனிதக்கடத்தலுக்கு பிரதான காரணமாக வறுமை, அறியாமை, கல்வியின்மை என்பன காணப்படுகின்றன. சட்டரீதியாக தொழிலுக்கு ஆட்சேர்ப்பு செய்வது போன்று மாயையை உருவாக்கி மக்கள் கவரப்படுகின்றனர். பாதுகாப்பான போக்குவரத்து வழங்கப்படுவது போன்று அவர்கள் அவர்களுடைய இடத்திலிருந்த வேறிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்பவர்கள் இடமாற்றம் செய்யப்படும் போன்று கைமாற்றப்படுகின்றனர். இவ்வாறு கைமாற்றப்படும் நபர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். சில நேரங்களில் சிலநேரங்களில் வற்புறுத்தப்படுகின்றனர். பலவீனமானவர்களிடம் பலத்தை பிரயோகித்து தவறாக வழிநடத்தப்படுகின்றனர். பாலியல் தொழில், தொழிலுக்கு கட்டாயப்படுத்தல், அடிமைத்தனம் மற்றும் உடற்பாகங்களை விற்பனை செய்தல் போன்ற தேவைகளுக்காக இவ்வாறு கடத்தப்படும் நபர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

ஆட்கடத்தல் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும் தடுப்புக்கான வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் ஆட்கடத்தலுக்கு எதிரான உலகத் தினத்தின் நோக்கமாகும். 'பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் வழி நடத்துகின்றன' என்பது 2021ம் ஆண்டுக்கான ஆட்கடத்தலுக்கு எதிரான உலகத் தினத்தின் தொனிப்பொருளாகும்.

மனித கடத்தலுக்கு பலியானவர்களை பிரசாரத்தின் கருவாக கொள்ளப்படுவதுடன், மனித கடத்தலில் இருந்து தப்பியவர்களின் அனுபவங்களை பெறுவதனூடாக ஏனையோர் பாடம் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இவ்வாண்டுக்கான தொனிப்பொருள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மனிதக்கடத்தலுக்கு எதிரான பிரசாரத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் பிரதானமானவர்களாக முன்நிறுத்தப்படுகின்றனர். அது மாத்திரமன்றி, மனிதக்கடத்தல் குற்றத்தை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்கண்டு மீட்பதற்கும் புனர்வாழ்வு பெறுவதை ஊக்குவித்து ஆதரவளிப்பதற்கான வழிமுறைகளை முன்வைப்பதும் இவ்வாண்டுக்கான தொனிப்பொருளின் உள்நோக்கங்களாக கொள்ளப்பட்டுள்ளது.

மனிதக்கடத்தலினால் பாதிக்கப்பட்ட பலர் உதவிபெற முயன்ற சந்தர்ப்பங்களில் புறக்கணிப்பு அல்லது தவறான புரிதலினால் பாதிக்கப்பட்ட அனுபவத்தையும் கொண்டுள்ளனர் என்கிறது ஐநா. அவர்களுடனான கலந்துரையாடல்களின்போது மிக அதிர்ச்சியடையக்கூடிய முன் அனுபவங்களை பெற்றிருந்ததையும் பலர் கடத்தற்காரர்களின் வற்புறுத்தலினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களினால் மறுசீரமைப்பு மற்றும் தண்டனைக்குள்ளானவர்கள். மேலும் பலர் களங்கப்படுத்தப்பட்டவர்களாகவும் போதிய உதவி கிடைக்காதவர்களாகவும் உள்ளனர் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதும், அவர்களின் பரிந்துரைகளை உறுதியான செயல்களாக மாற்றுவதும் மனித கடத்தலை எதிர்ப்பதில் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட மற்றும் பயனுள்ள அணுகுமுறைக்கு வழிவகுக்கும் என்று ஐநா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத மனிதக் கடத்தலை தடுப்பதற்கு இலங்கையில் தேசிய மனித கடத்தலுக்கு எதிராக செயலணியொன்று கடந்த 2010 உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்காணல், உதவுதல், பாதுகாத்தல் மற்றும் மனிதக்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக செயற்படல் என்பன இச்செயலணியின் செயற்பாடுகளாகும். இச்செயலணியில் நீதியமைச்சு, வெளியுறவு அமைச்சு, அரசாங்க தலைமை சட்ட அதிகாரி, இலங்கை பொலிஸ், குடிவரவு குடியகழ்வு திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குற்றவியில் புலனாய்வுத் திணைக்களம், சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சு, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உட்பட மேலும் பல அமைப்புக்கள் அங்கத்தினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளன.

கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தரங்களை இலங்கை அரசு முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என அமெரிக்க அரச திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவ்வாறு செய்ய இது குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தொடரப்படும் வழக்குகள், அரச சிறுவர் இல்லங்களில் இடம்பெற்ற பாலியல் சுரண்டல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்தல் ஆகியன இதற்கான சான்றாகும். மனிதக்கடத்தல் தடுப்பு முயற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கல் போன்ற விடயங்களில் இலங்கை அரச சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியிருந்தாலும் முன்னரிலும் பார்க்க அதிகரிக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபடவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறைந்தபட்ச தடுப்பு முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது. தொற்றுநோய் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (National Anti-Human Trafficking Task Force (NAHTTF) தொடர்ந்து சந்தித்தது, மேலும் ஒரு புதிய கடத்தல் எதிர்ப்பு new anti-trafficking NAP ஐ இறுதிசெய்தது. NAHTTF தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய நிபுணர்களின் உள்ளீட்டைக் கொண்டு 2021-2025 NAP ஐ உருவாக்கியது மற்றும் பெப்ரவரி 2021 இல், அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டது.

அரசாங்கம், ஒரு சர்வதேச அமைப்புடன் இணைந்து, கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரசாரங்களை உருவாக்கியது. விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்; உள்ளூர் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் கூட்டங்களை நடத்தியது.

2021 ஜனவரியில், 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வேலைவாய்ப்பு சட்டத்தை அரசாங்கம் திருத்தியது, குறைந்தபட்ச வேலைவாய்ப்பு வயதெல்லையை 14 இலிருந்து 16 ஆக அதிகரித்தது. கூடுதலாக, 16 முதல் 18 வயதிற்குட்பட்ட ஒரு நபர் பணியமர்த்தப்படலாம், ஆனால் அபாயகரமானவை என வரையறுக்கப்பட்ட வேலைகளில் பணியாற்றுவதற்கான தடை உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம் என்று சட்டத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image