சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்!

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்!

கொவிட்-19 உலகப் பரவலானது 2020 ஆம் ஆண்டில் உலகிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலம்பெயர்தோர்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், 'மனித இயக்கத்தை மீள்வடிவமைத்தல்' ('Reimagining Human Mobility') என்ற தொனிப்பொருளில் இன்றைய சர்வதேச புலம்பெயர்வோருக்கான தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

டிசம்பர் 18ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்வோருக்கான தினமாகும். 2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ புலம்பெயருபவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கத்துக்காக பிரகடனப்படுத்தப்பட்டது தான் இந்த சர்வதேச புலம்பெயர்வோர் தினமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையானது, புலம்பெயர்வோருக்கான தினத்தை பிரகடனப்படுத்த முன்னரே அவர்களுக்கான சமவாயத்தை 1990ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி பிரகடனப்படுத்தியது. இச்சர்வதேச சமவாயத்தில் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், அத்துடன் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கான உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமானது, 1996ஆம் ஆண்டு இச்சமவாயத்தில் கையொப்பமிட்டுள்ளது.

அதிக வருவாய் உள்ள நாடுகளில் உள்ள தேசிய தொழிலாளர்களை விட சராசரியாக 13 சதவீதம் குறைவாக புலம்பெயர்ந்தோர் உழைப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) ஒரு புதிய அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 உலகப் பரவல் நோய் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். 'புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் தொழிலாளர் சந்தையில் சிகிச்சையின் சமத்துவமின்மையை எதிர்கொள்கின்றனர், இதில் ஊதியங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான அணுகல், வேலை நிலைமைகள், சமூக பாதுகாப்பு மற்றும் தொழிற்சங்க உரிமைகள் ஆகியவை அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்பும் சுழற்சி முழுவதும் பாகுபாடின்றி அவர்களது ஆரோக்கியம் கவனிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு ஒருங்கிணைந்ததும், ஒன்றிணைந்ததுமான முயற்சிகள் அவசியம் என்பதை கொவிட்-19 நெருக்கடி உலகுக்கு கற்பித்திருப்பதாக நாங்கள் நம்புவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில்இ புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடலில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 இனால் ஏற்பட்டுள்ள மற்றுமொரு விளைவாக வேலைவாய்ப்பு சந்தையின் சுருக்க நிலை அமைவதுடன், இது இந்த வருடம் தொழில்களுக்குச் செல்லவுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கடுமையான பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிவகுத்துஇ தொழிலாளர்கள் அனுப்பும் பணப் பாய்வில் குறைவை ஏற்படுத்தும் என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொழிலாளர் புலம்பெயர்வு பற்றிய தேசியக் கொள்கைக் கூற்று

தொழிலாளர் புலம்பெயர்வு பற்றிய இலங்கைத் தேசியக் கொள்கை வேறு நாடுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ள இலங்கைப் பிரஜைகள் தொடர்பிலான அரசக் கொள்கையைத் தெளிவுபடக் கூறுவதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்புகை அமைச்சினால் விருத்தி செய்யப்பட்டுள்ளது. இக் கொள்கை பின்வரும் இலக்குகளைக் கொண்டுள்ளது.

1. பொருளாதாரத்தில் தொழிலாளர் புலம்பெயர்வின் பங்குக்கான நீண்ட கால தொலைநோக்கொன்றை விருத்தி செய்தல்.
2. பொருளாதாரம்இ சமுதாயம்இ புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் ஆகியவற்றின் மீது தொழிலாளர் புலம்பெயர்வின் நன்மைகளை மேம்படுத்துதலும் அதன் பாதகமான தாக்கங்களை இழிவளவாக்குதலும்.
3 புலம்பெயர் தொழிலாளர்களின் எல்லா மனித உரிமைகளும் தொழில் உரிமைகளும் நிறைவேற்றப்படுதலையும் பாதுகாக்கப்படுதலையும் நோக்கிப் பணியாற்றுதல்.

கொவிட்-19 பரவல் காரணமாக இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரையில் நாட்டுக்கு மீள அழைத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 இலிருந்து காணப்பட்ட போக்கினைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பிற்கான வெளிச் செல்லுகைகள் 2019இல் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்கான வெளிச் செல்லுகைகள் 2018இன் 211இ459 இலிருந்து 2019இல் 203இ186 ஆக 3.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

இந்த வீழ்ச்சியானது முக்கியமாக 2018இன் 129இ774 இலிருந்து 2019இன் 122இ201ஆக 5.8 சதவீதத்தினால் வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக வெளிச்சென்ற ஆண்களின் வீழ்ச்சியால் ஏற்பட்டது. அதற்கு மேலதிகமாகஇ வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக வெளிச்சென்ற பெண்கள் 2018இல் 81இ685 இலிருந்து 2019இல் 80இ985 ஆக 0.9 சதவீதத்தினால் சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது.

வீட்டுப்பணிப்பெண்

வீட்டுப்பணிப்பெண் வகையினர் 2018 உடன் ஒப்பிடுகையில் 5.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்ததுடன்இ 2019இல் வெளிச் சென்றவர்களின் மொத்த வீழ்ச்சியில் 40.7 சதவீதமாகப் பங்களித்திருந்தது. வீழ்ச்சி காணப்பட்டிருந்த போதிலும்இ வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பிற்காக வெளிச்சென்றவர்களில் வீட்டுப்பணிப்பெண் மற்றும் திறனற்ற வகையினர் பெரும்பகுதியினை இன்னும் வகைகூறுகின்றனர். இதேவேளையில்இ கரிசனைக்குரிய காலப்பகுதியில் நிபுணத்துவ வகையில் 36.8 சதவீத குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பிற்கும் மற்றும் திறன் சார் வகையிலான 6.5 சதவீத வளர்ச்சிக்கும் 30 -34 ஆண்டுகள் வயதுப்பிரிவினரின் ஆண்களின் குறிப்பிடத்தக்களவு வெளிச்செல்லுகைகளினால் பிரதானமாக உந்தப்பட்டது.

மத்திய கிழக்கு

இலங்கைக்கான பிரதான வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு இலக்காக மத்திய கிழக்கு பிரதேசம் தொடர்ந்தும் காணப்பட்டதுடன் இது மொத்த வெளிச் செல்லுகைகளில் ஏறத்தாழ 85.0 சதவீதத்திற்கு வகை கூறியது. அதற்கேற்பஇ 97.0 சதவீதமான வீட்டுப் பணிப்பெண் வகையினரும் 71.8 சதவீத திறனற்ற வகையினரும் சவூதி அரேபியாஇ கட்டார்இ குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் மீது கவனம் செலுத்தியிருந்தனர்.

பால் ரீதியான வெளிச் செல்லுகையின் படி, 80.0 சதவீதமான வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக வெளிச்சென்ற ஆண்களும் 92.5 சதவீதமான வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக வெளிச்சென்ற பெண்களும் மத்திய கிழக்குப் பிரதேசத்தின் மீதே கவனம் செலுத்தியிருந்தனர். இதேவேளையில்இ மத்திய கிழக்கு நாடுகளில் கொவிட் -19 தொற்றுநோய்ப் பரவியமையால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளின் விளைவாக 2020இல் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பிற்கான வெளிச்செல்லுகைகளில் வீழ்ச்சியானது எதிர்பார்க்கப்படுகின்றதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

Author’s Posts