2013- 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்றுள்ள இயற்கைக்கு மாறான பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணங்களில் 62 வீதமானவை நெருங்கியவர்கள் மற்றும் முன்னாள் துணைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA ) வின அனுசரணையுடன் களனி பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது.
நாட்டின் 5 மாகாணங்களில் 2013-2015 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 243 பெண்கள் மற்றும் சிறுமிகளுடைய இயற்கைக்கு மாறான மரணம் குறித்து இவ்வாய்வில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான ஆய்வுவொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இவ்வாய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட 243 கொலைகளில் 128 அதாவது 69 வீதமான கொலைக்கு சட்டரீதியான கணவன்மாரே கண்டறியப்பட்டுள்ளதுடன் 69 வீதமான சம்பவங்கள் பதிவாவதில்லையென்பது கவலைக்குரிய விடயாகும்.
பாலின அடிப்படையிலான வன்முறைகள் பெரும்பாலும் மௌனிக்கப்படுவதை இது குறிக்கிறது. இதனை வௌிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கிலும் இயற்கைக்கு மாறான பெண் இறப்புகள் தொடர்பான நீதித்துறை செயல்முறைகள் மற்றும் விளைவுகளை விவரிப்பதும் இந்த ஆய்வின் நோக்கமாகும்.
மேலும் இவ்வாறான விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு மற்றும் நீதித்துறை செயல்முறைகளுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கான கொள்கை உள்ளீடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணை மற்றும் நீதித்துறை செயல்முறைகளுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கான கொள்கை உள்ளீடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதை இவ்வாய்வின் நோக்கமாகும்.