நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கி எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதானால் இலங்கையில் ILO C190 சமவாயத்தை அங்கீகரித்தல் மிகவும் அவசியம்.
பெண்களுக்கு உடல் உள பாலியல் மற்றம் பொருளாதாரரீதியாக ஏற்படுத்தும் அனைத்து கொடுமைகளும் பாரபட்சங்களும் பெண்களுக்கு எதிரான வன்முறையாம். யாழ்மாவட்டத்தில் அரச அரசார்பற்ற நிறுவனங்கள் கடந்த சில ஸதாப்தகாலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் கட்டமைப்புகள் உருவாகியமையால் முறைப்பாடுகள் அதிகரித்த போதும் வேலைத்தளங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவு தொடர்பான வன்முறைகளுக்கான முறைப்பாடுகள் இன்னும் மௌனிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது.
இதற்கான காரணங்கள் வேலைத்தள பாலியல் தொந்தரவு சாதாரணவிடயம் என்ற தவறான எண்ணப்பாடு, வடக்கில் தொழிற்சங்கள் செற்பாடுகள் பொதுவாக நலிந்த நிலையில் உள்ளமை, அதிகாரத்தில் உள்ளவரகக்கு எதிரான முறைப்பாடு செய்வதால் வரும் பின்விளைவுகளை எண்ணிப்பயம் கொள்கின்றமை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதகமான விமர்சனங்கள், நீதிக்கான காலதாமதங்கள், தகுந்த சாட்சிகள் சான்றுகள் இன்மை என்பனவாகும்.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறையினை இப்போதோ நிறத்துவதாயின் C190 யை ஏற்று கைச்சாத்திடல் வேண்டும். அத்துடன் வேலைத்தளங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவு மற்றும் வன்முறைகளை தடுப்பதற்கான சட்டங்களை இயற்றல். பாலியல் தொந்தரவினை தடுப்பதற்கான கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கல், தொழிற்சங்கங்களை வலுப்படுத்தல், வன்முறையாளர்களின் மனப்பாங்கினை மாற்றல், வன்முறைகளை விசாரிப்பதற்கான உள்ளக்பொறிமுறையினை உருவாக்கல், நீதியினை பெறுவதற்கான வழிவகைகளை நடைமுறைப்படுத்தல் என்பனவற்றை மேற்கொள்ளல் வேண்டும்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான பிரசார செயற்பாட்டுக்காக பெண்கள் அபிவிருத்தி அமைப்பு நவம்பர் மாதம் 25ம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ம் திகதி வரையான பிரசார காலமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இவ்வாண்டு 30வது வருட பூர்த்தியை கொண்டாடும் இப்பிரசார நடவடிக்கையில் பெண் படுகொலை என்பது பிரதான தொனிப்பொருளாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் மற்றும் வீட்டுப் பணிப்பெண்களின் உரிமையை பாதுகாத்தல் என்பன உப தொனிப்பொருள்களாகவும் கொள்ளப்பட்டுள்ளன. இவ்விரு உப தொனிப்பொருள்களுக்கான ILO சமவாயங்களான C190 மற்றும் C189 என்பவற்றை இலங்கையில் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அனைத்து உரிமை சார் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என்பவற்றின் கோரிக்கைகளாகும்.
இலங்கையின் தேசிய வருமானத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கும் பெண் தொழிலாளர்களுக்கு வேலைத்தளத்தில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை தடுக் அனைவரும் கைகோர்ப்போம்!
உதயனி நவரத்தினம்
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்ததர்
யாழ்ப்பாணம்