வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் (ப்ரோடெக்ட்) ஏற்பாடு செய்த விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நோர்வுட் நகரில் நடைபெற்றது.
நோர்வூட் நகரில் கோவில் முன்னால் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் வீடு மற்றும் தொழில் இடத்தில் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றார்கள், எவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்று நடித்துக் காட்டினர். அத்துடன் இவற்றில் இருந்து தம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
தொழிலாளர் மற்றும் வீட்டுப் பணிப்பணியாளர்களின் பாதுகாப்புக்காக ILO C189 , C190 ஆகிய சமவாயங்களை நாட்டில் அங்கீகரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த நாடகத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்த வீதி நாடக்கத்தை சுமார் 100 பேர் வரை பார்வையிட்டதுடன் அவர்கள் முககவசம் அணிந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இதனை பார்வையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.