பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு நீங்களும் ஒரு இணைநிலை ஆதரவாளராக செயல்படுவது எப்படி என்பது தொடர்பில் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான மன்றம் விக்கமளித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஒரு இணைநிலை ஆதரவாளராக மாறுங்கள்
இணைநிலையினர், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் இடையே மேற்கொள்ளப்படும் பாலுணர்வுடன் தொடர்புடைய கருத்துக்கள், நகைச்சுவைகள் மற்றும் அத்தகைய மொழி வடிவங்களை நிராகரித்தல், கேள்விக்கு உட்படுத்தல் மற்றும் தொடர்புடைய நபர்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் ஆண்களும், பையன்ளும் இவ்விடயம் தொடர்பில் சிறந்த நேச அணிகளாக செயற்படமுடியும்.
இவை இலகுவாக கலந்துரையாடப்பட முடியுமான விடயங்களல்ல. எனினும் இவற்றை எவ்வளவு விரைவாக நாம் தொடங்குகின்றோமோ அவ்வளவு விரைவாக இலங்கையில் பால்நிலைப்படுத்தப்பட்ட வன்முறைகளை அகற்றுவதில் வெற்றி காண முடியும்.
நீங்களும் இதற்கு வகைகூற வேண்டியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் கேள்விகள் அல்லது கரிசனைகளை அந்தரங்கமாக எழுப்புங்கள். பாலுணர்வு மிக்க நடத்தைகள் மற்றும் மொழிநடையின் தீங்குகளை எடுத்துரையுங்கள். மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கு பொதுமக்கள் ஒன்றிணைதல் முக்கியமானது.