வைரஸ் தொற்று போலவே பால்நிலை வன்முறை என்பது ஒரு உலகப் பரவல் தொற்று!

வைரஸ் தொற்று போலவே பால்நிலை வன்முறை என்பது ஒரு உலகப் பரவல் தொற்று!

வைரஸ் தொற்று போலவே பால்நிலை வன்முறை என்பது ஒரு உலகப் பரவல் தொற்று ஆகும்.

பால்நிலை வன்முறையானது ஒரு பேரழிவை நாளாந்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஊடகங்களில் அதிக அளவில் பேசப்படாததன் காரணமாக இது ஒரு பாரிய பிரச்சினையாக தென்படுவதில்லை என்று பால்நிலை சமத்துவம் மற்றும் முரன்பாட்டுக் கூருணர்வு நிபுணர் வீரசிங்கம்  தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம் இணையதளத்திற்கு வழங்கியுள்ள செவ்வி வருமாறு,

கேள்வி - கொவிட்-19 உலகப் பரவல்  பால்நிலை சமத்துவத்திலும் பெண்களுக்கு எ எதிரான வன்முறையிலும் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது?

பதில் - கொவிட் பரவலுக்கு முன்னதாக பால்நிலை சமத்துவம் தொடர்பான தன்மையை முதலில் பார்ப்பது சிறந்ததாகும். வைரஸ் தொற்று போலவே பால்நிலை வன்முறை என்பது ஒரு உலகப் பரவல் தொற்று ஆகும். பால்நிலை வன்முறையானது ஒரு பேரழிவை நாளாந்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஊடகங்களில் அதிக அளவில் பேசப்படாததன் காரணமாக இது ஒரு பாரிய பிரச்சினையாக தென்படுவதில்லை.

உலகில் உதாரணமாக குடும்ப தகராறு காரணமாக 137 பெண்கள் நாளொன்றில் கொல்லப்படுகின்றனர். கணவர் குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய உறவினரின் மூலமாக இந்த கொலைகள் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான அமைப்பின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 87 ஆயிரம் பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுள் 50,000 பேர் தங்களது துணை அதாவது கணவன் அல்லது காதலன் ஆகியோரால் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். 30 ஆயிரம் பேர் முன்னால் காதலனால் கொல்லப்பட்டுள்ளனர்.

வன்முறைகளை எதிர்நோக்கும் பெண்களில் 10 வீதமானோர் மாத்திரமே பொலிஸில் முறையிட்டு சட்ட உதவியை நாடுகின்றனர். 90 வீதமானோர் அந்த பிரச்சினைகளை வெளியே சொல்வதில்லை.

இவ்வாறான நிலையில் இலங்கை உட்பட155 நாடுகளில் குடும்ப வன்முறையை தடுக்கும் கட்டளை சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலைத்தளத்தில் நடைபெறும் தொல்லைகளை இல்லாதொழிப்பதற்காக 140 நாடுகள் சட்டங்களை உருவாக்கியுள்ளன.

உலகில் இடம்பெறும் ஆட்கடத்தலில் 72 வீதமானவர்கள் பெண்களும் சிறுமிகளும் ஆவர். பாலியல் சுரண்டல்களுக்காகவே அதிகளவில் கடத்தல்கள் இடம்பெறுகின்றன.

2020 வரையில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட் பெண்களில் கிட்டத்தட்ட 20 கோடி பெண்கள் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

உலகில் உள்ள பெண்களில் 1.5 கோடி பேர் 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

உலகிலுள்ள 370 கோடி பெண்களுள்இ 50 வீதமானோர் நாளாந்தம் பொது இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். இலங்கையில் 90 வீதமான பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.

உலகில் உள்ள பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுள் 82 வீதமானோர் பாலியல் தொல்லைக்கு முகம் கொடுக்கின்றனர். அவர்களில் 44 வீதமானோர் பாராளுமன்றத்திற்கு உள்ளேயே பாலியல் தொல்லைக்கு முகம் கொடுக்கின்றனர்.

கேள்வி - பெண்களுக்கு எதிரான வன்முறையில் இலங்கையின் நிலை என்ன?

பதில் - இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் பெண்கள். அவர்களில் மூன்றில் ஒரு பேர் நாளாந்தம் ஏதோ ஒரு வகையில் வன்முறைக்கு உள்ளாகின்றனர். வேலை செய்யும் பெண்களில் 32 வீதமானோர் வீட்டில் துணைவரால் நடக்கின்ற வன்முறை காரணமாக மருத்துவ சேவைகளை பெறுகின்றனர். அப்படியானால் மருத்துவ சேவையை பெறாதவர்களின் எண்ணிக்கை எப்படி ஆக இருக்கும்?

இலங்கையில் 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களுள் 28 வீதமானோர் முதன்முதலில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் (இது பாடசாலை செல்லும் வயது) அத்துடன் 19 முதல் 29 வயதிற்குட்பட்ட ஆண்களில் 60 வீதமானோர் முதன்முதலில் பாலியல் பலாத்காரம் உட்பட பெண்களுக்கெதிரான வன்முறை செய்துள்ளனர்.
என்பது கெயார் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 2013-ஆம் ஆண்டுக்கான ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இவ் ஆய்வில் இவ்வாறு பெண்களுக்கெதிரான வன்முறை புரிய காரணமாக 68மவீதமான ஆண்கள் தமக்கு பெண்களை வல்லுறவு புரிய உரிமையும் அதிகாரமும் இருப்பதாகவும், 20மவீதமானவர்கள் மானவர்கள் பகிடி மற்றும் ஜொலிக்காகவும் 12மூ மானவர்கள் தண்டனை கொடுப்பதற்காகவும் 20 வீதமானவர்கள் மது பாவனையினால் என்றும் கூறி இருக்கின்றனர் எனின் பெண்கள் தொடர்பான ஆண்களின் சிந்தனை எவ்வளவு பாரதூரமானது என்பது புரியும்.

மேலும் அவ்வாறு வன்முறை புரிந்தவர்களில் 2மவீதம் மட்டுமே சட்டத்தின் முன் தண்டணைப் பெற்றுள்ளனர் சுமார் 80 வீதமானவர்கள் தாம் பிழை செய்ததாக மனம் வருந்தவில்லை என்றும் பெண்களை துன்புறுத்த வன்முறை செய்ய வல்லுறவு புரிய தனக்குரிய உரிமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தியதற்கு வருந்த தேவையில்லை என்னும் கூறுகின்றனர் அந்த சிந்தனை 15 தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட ஆண்களிடமும் இருப்பது மிகப் பயங்கரமானது

அத்துடன் இலங்கையில் வருடம் ஒன்றுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றனர். இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பிள்ளைகள் திட்டமிடாத கர்ப்பம் தரித்தலால் பிறக்கின்றன அதாவது விருப்பம் இன்றிய கர்ப்பம். . எனவே ஒரு லட்சத்து 20,000 தாய்மார்கள் விருப்பமின்றி குழந்தையைப் பெற்றுக் கொள்கின்றனர். தேவையற்ற ஒரு குழந்தையை அந்தத் தாய் சுமார் 10 மாதம் மன அழுத்தத்துடன் விருப்பமின்றி கர்பத்தில் சுமப்பதால் அக் குழந்தையின் உடல் உள வளர்ச்சியில் அது எவ்வாறான பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்? 

அத்துடன் 2019 ஆண்டில் மட்டும் 28 தாய்மார் விருப்பமின்றி கர்பத்தினால் ஏற்பட்ட பிரவசத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இறந்துள்ளனர். இவர்களில் அநேகர் எற்கனவே ஆகக் குறைந்தது 2 குழந்தைகள் உள்ளவர்கள்.

ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளில் எனில் 10 வருடத்திற்கு 12 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன
2018 அறிக்கையின்படி இலங்கையில் 59 வீதமான பெண்கள் கணவனால் 10வீதமானவர்கள். தந்தையால் 23ம வீதமானவர்கள் ஆண் துணையினால் பாலியல் பலாத்காரம் உட்பட பாலியல் தொந்தரவிற்கும் உட்படுகின்றனர்

2019 பெண்கள் நல்வாழ்வு தொடரபான புள்ளிவிபரத் திணைக்கள ஆய்வில் சுமார் 2,900.000. 24மவீத பெண்கள் தனது துணையினால் பாலியல் மற்றும் உடல் ரீயிலான வன்முறைக்கும் 18.8 வீத பெண்கள் வாழ்நாள் முழுதும் பாலியல் மற்றும் உடல் ரீயிலான வன்முறைக்கும் உட்படுவதாக அறிக்கைப் படுத்தப்பட்டுள்ளது. இது கொவிட் பரவலுக்கு முந்தைய நிலையாகும்.

தற்போது இந்த நிலை மிகமோசமான நிலைக்கு சென்றுள்ளது. தேசிய பெண்கள் குழுவின் தவிசாளர் திருமதி மானெல் ஜயமான்னவின் கூற்றுப்படி மேற் குறிப்பிட்ட நிலைமை இரட்டிப்படைந்துள்ளதாக குறிப்பிடுகிறார். 1938 பெ;ண்கள் அவசர இலக்கத்திற்கு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் மார்ச் ஏப்ரல் மாதத்தில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார் . இங்கு முறைப்பாடு செய்தவர்கள் தொலைபேசி வசதி உள்ளவர்கள். அநேகருக்கு வன்முறைக்கு உட்படுத்துபவரும் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் முறைப்பாடு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
அத்துடன் கொழும்பு வைத்தியசாலையில் விபத்து பிரிவில் சேர்கப்பட்ட பெருமளவானவர்கள் குடும்ப வன்முறையினால் காயமடைந்தவர்கள் இதுவும் சாதாரண நிலையை விட இரட்டிப்பாக இருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி உத்தியோகத்தர் ரம்யானி டி சொய்சா கூறுகின்றார்.

இந் நிலைமை கிராமப்புரங்களில், பெருந்தோட்ப்பகுதியில் இன்னும் அதிகாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. நமது கலாச்சாரத்தில் பெண்கள் வீட்டு பிரச்சியையை வெளியில் கூறுவது மிகப் பெரிய குற்றமாக பார்க்கப்படுகின்றது.
அத்துடன் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றவர்கள் தங்களது நடத்து கொடுப்பனவை வழங்காததால் நீதிமன்றுக்கு போக முடியாமல், வேலைகளுக்கு வெளியில் செல்ல முடியாமல் பிள்ளகளையும் பராமரிக்க முடியாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது

ஓய்வு முற்றிலுமாக குறைந்துள்ளதால் வீட்டு வேலை, அலுவலக வேலை, பிள்ளை பராமரிப்பு, பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் அநேகமான பெண்களே செய்வதனால் அவர்கள் அதிக மன அழுத்தம், போன்ற நோய்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இவ்வாறான நிலையினால் அநேக பெண்கள் நிலையான அங்கவீனம், கருக்கலைதல், எதிர்பார கர்ப்பம், பாலியல் நோய்கள், பயம் மற்றும் பதற்றம், எந்நேரமும் முழுமையடைய முயற்சித்தல் , அளவுக்கதிகமான அடக்கம் (எந்தவொரு பாரபட்சத்தையோ அநியாயத்தையோ தட்டிக் கேட்க முடியாமை) , சுய அபிமானத்தை கௌரவத்தை இழத்தலைக் கூடபெரிய விடயமாக கருதாமை, நித்திரை மற்றும் உணவு உண்ணலில் பிரச்சினை, அதிக விரக்தி, தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளல், இந்த வன்முறை தொடர்ந்து இடம்பெறும் வேலை இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசடைந்து கொண்டு செல்கிறது.

கேள்வி - அமுலாக்கப்படும் முடக்க நிலையால் அனைவரும் வீடுகளிலேயே இருக்கவேண்டிய நிலைமை உள்ளது. இது பெண்களின் பணிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளதுடன்இ அவர்கள் வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் சூழலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் இந்த நிலைமை எவ்வாறுள்ளது?

பதில் - இந்த நிலைமையானது கொவிட் பரவலுடன் தீவிரமடைந்துள்ளது கடந்த மார்ச் மாதம் முதல் முடக்க நிலை காரணமாக அனைவரும் வீடுகளில் உள்ளனர். பெண்களுக்கு வீட்டு வேலை அதிகரித்துள்ளது. அத்துடன் வேலை செய்யும் மணித்தியாலங்களும் அதிகரித்துள்ளன. சிலர் வீடுகளில் இருந்து வேலை செய்வதனால் அவர்களுக்கு வீட்டு வேலையுடனன அலுவலக வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதுமாத்திரமன்றி இவர்களுக்கான ஓய்வு இல்லாமல் போகிறது. அதாவது மிகவும் கஷ்டத்தின் மத்தியில் பல போராட்டங்களினால் படிப்படியாக பெற்றுக் கொண்டு அனுபவித்த மனிதருக்கு கட்டாயம் இருக்கு வேண்டிய ஓய்வெடுத்தல், அயலவர்களுடன் உறவினர்களுடன் தொடரபாடல், தனக்கு தேவையான நேரத்தில் தேவையான இடத்திற்கு போய் வரல் போன்ற விடயங்களும் பிள்ளை பராமரிப்பு, குடும்ப பராமரிப்பு, வீட்டு வேலை கொவிட்டிலிருந்து பாதுகாத்தல் போன்ற பால்நிலை அழுத்தங்களினால் இன்று இவ்வளவு காலம் அனுபவித்த உரிமைகள் படிப்படியாக மறுக்கப்பட்டு அல்லது இழக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இவர்கள் இவ்வாறாக தொடர்ச்சியாக ஓய்வின்றி நாளாந்தம் வீட்டிற்குள்ளேயே தொடர்சியாக ஒரே வேலை செய்து களைப்படைந்து சலிப்படைந்து போகின்றனர்

திருமணத்தின் பின்னர் பெண்கள் தனது துணையால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவது இந்தியாவில் சட்டவிரோதமானதாகும். ஆனால் இலங்கையில் அது சட்டவிரோதமானதல்ல. அதனால் திருமணத்தின் பின்னரும் பல பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகியபோதும் அதனை வெளியே சொல்ல முடியாத நிலை. சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. அத்துடன் அதனால் ஏற்படும் உடல் உள தாக்கங்களோடு தொடர்ந்து ஒரே வீட்டில் வசிக்கும் நிலை காணப்படுகின்து

அதுமாத்திரமன்றி, அடித்தல் உதைத்தல் பாரதூரமாக காயங்கள் ஏற்படுத்துதல் போன்ற வன்முறைகள் இடம்பெறுகின்றன. கடந்த மார்ச் மாதம் மட்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் வழமைக்கு மாறான இரட்டிப்பு வீதமானோர் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு திடீர் அதிகரிப்பாகும். ஏற்கனவே கூறியது போல அறிக்கையிடும் வெளியில் சொல்லும் 100க்கு 10 சதவீதமான எண்ணிக்கைதான் இவர்கள். அப்படியானால் இவ்வாறு வெளியே சொல்லாதவர்களின் எண்ணிக்கை எந்த அளவாக இருக்கும்?

ஆரம்பத்தில் 40 வீதம் ஆக பதிவாகியிருந்த குடும்ப வன்றையானது கொவிட் 19 காலப்பகுதியில் தற்போது 60 வீதமாக அதிகரித்து இருக்கின்றது. 20 வீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றதாக ஐக்கிய நாடுகளின் மகளிர் அமைப்பின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி - கொவிட் பரவலானது 25 ஆண்டுகளாக அதிகரித்துவரும் பாலின சமத்துவத்தை அபகரித்துவிடக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் தொடர்பான புதிய உலகளாவிய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை இலங்கையில் எவ்வாறுள்ளது?

பதில் - இலங்கையில் 52 வீதமான பெண்கள் இருக்கின்ற நிலையில் கடந்த நாடாளுமன்றத்தில் 13 பெண்களே பிரதிநிதிகளாக இருந்தனர். இவ்வாறான நிலையில் பெருமளவான பெண்கள் அமைப்பினரின் வலியுறுத்தலில் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் ஊராட்சி சபையிலே கடந்த முறை 22 சதவீதமான பிரதிநிதித்துவத்தை பெண்களால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது. இந்த முறை பாராளுமன்றத்திற்கு 12 பெண் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள மகளிர் விவகார அமைச்சு ஒன்று இருந்தது. அந்த அமைச்சு இல்லாத செய்யப்பட்டு இப்பொழுது ஆணொருவர் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான ஒதுக்கீடு மகளிர் விவகார அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளது.

திருமணம், பாலியல் செயற்பாடு , குழந்தைபேறு, குடும்பக் கட்டுப்பாடு போன்ற பெண்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்களில் தொடர்பில் படிப்படையாக தீர்மாணம் எடுக்கும் உரிமையை மெல்ல மெல்ல அனுபவித்துக் கொண்டிருந்த நிலைமையும் படிப்படியாக மறுக்கப்பட்டு அல்லது இழக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. சிறுவர் திருமணங்கள் (18 வயதிற்கு குறைந்த) சிறு வயது கர்ப்பம் இக்காலப் பகுதியில் வெகுவாக அதிகரித்துள்ளது. இலங்கையில் ஆண்டொன்றிற்கு 50 சிறுமிகள் துஷ்பிரயோகத்தின் காரணமாக கர்ப்பம் தரிப்பதாக தெரிவக்கப்படுகின்றது

இதேவேளை, தற்போது பெண்களுக்கு தொழில்வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், பெண் பிள்ளைகள் பருவமடைந்ததையடுத்து, சிறுவர் திருமணமும் அதிகரித்துள்ளது. பெண்கள் பாடசாலைக்கு செல்வதன் காரணமாக இந்த சிறுவர் திருமணம் வீதம் குறைந்த அளவில் காணப்பட்டது. இலங்கையில் இது தொடர்பில் இதுவரையில் எண்ணிக்கை அளவிலான தகவல் வெளியிடப்படவில்லை.

அநேக பெண்கள் வீட்டு வேலைகளையும செய்துக் கொண்டு சிறு தொழிலிலும்ல் ஈடுபடுகின்றார்கள் குறிப்பாக பாதை ஓரங்களில் கடலை முறுக்கு முதலானவை விற்பனையில் ஈடுபடுபவர்கள் போக்குவரத்து சேவை இல்லாமை காரணமாக சன நடமாட்டம் இல்லாதமையினால் அவர்களுடைய தொழில் வாய்ப்பும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

அயலவர்களுடன் உறவினர்களுடன் தொடர்பாடல் தனக்கு தேவையான நேரத்தில் தேவையான இடத்திற்கு போய் வரல் ( நடமாடும் உரிமை) போன்ற விடயங்களும் பிள்ளை பராமரிப்பு, குடும்ப பராமரிப்பு, வீட்டு வேலை கொவிட்டிலிருந்து பாதுகாத்தல் போன்ற பால்நிலை அழுத்தங்களினால் இன்று இவ்வளவு காலம் அனுபவித்த உரிமைகள் படிப்படியாக மறுக்கப்பட்டு அல்லது இழக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

இதேநேரத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பி இருக்கின்றமை காரணமாக அவர்களது பொருளாதார நிலைமையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் மீண்டும் நாட் சம்பளத்திற் செல்ல நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது

இவ்வாறாக 25 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட பெண்களின் பொருளாதார ரீதியான முன்னேற்றம் தற்போது வீழ்ச்சி போக்கை நோக்கி செல்லக் கூடியதாக இருக்கின்றது.
சீனவில் இருந்து கொவிட்  பரவினாலும் ஆடைத் தொழிற் துறையில் தொழில் புரிந்த பல்லாயிரக்கனக்கான பெண்கள் கொவிட் இரண்டாம் அலை அப் பெண்களை குற்றவாளியாக்கி அது தொடர்பில் ஊடகங்களில் பாரிய மன அழுத்தத்திற்கு உள்ளாக்கபட்டு இருக்கின்றனர்.

அதேவேளை , ஆண்கள் அதிகமாக ஆதிக்கத்தை கொண்ட இராணுவம், மீன் சந்தை மற்றும் போதை வஸ்து பாவனைகளினால் உருவாக்கப்பட்ட கொவிட் 19 அலைகள் தொடர்பில் ஆடைத் தொழிற் துறையில் ஒப்பிடும் போது அந்த அளவிற்கு அவர்களை குற்றவாளியாக்குவதை தவிர்திருந்தனர்

தொழில் பயிற்சிகள் நிறுத்தப்பட்டமை காரணமாக மீன்பிடி, கட்டிட நிர்மாணம், போக்குவரத்து, வெல்டிங், சுற்றுலாத்துறை, ஊடகத்துறை, விவசாயம் உள்ளிட்ட முறைசாரா தொழிற் துறையில் மெல்ல மெல்ல ஈடுபட்ட பெண்களும் அவற்றில் பயிற்சியை நிறைவு செய்து இத் தொழிற்றுறைக்கு செல்லும் நிலைமையும் இல்லாமல் போயிருக்கிறது.

கேள்வி - கொவிட் பரவலானது தொழிலாளர்கள் வாழ்வில்இ குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது?

பதில் - முறைசார்ந்த முறைசாரா மற்றும் முறையற்ற என மூன்று வகையான தொழில் துறைகளில் பெண்கள் பணியாற்றுகின்றனர். முறைசார்ந்த தொழில் என்பது அங்கீகரிக்கப்பட்ட தொழிலுக்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டு அவர்களுக்கு உரிய முறையில் உரிய வேதனம் உட்பட ஏனைய தொழில் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் சலுகைகள் வழங்கப்படும் தொழில் துறையாகும் .

முறைசாரா தொழில் துறையினர் எனும்போது அவர்கள் தொழில் என்ற ரீதியில் அரசினால் அங்கீனரிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத, தொழிலுக்காக ஒப்பந்தம் உரிய முறையில வழங்கப்பட்டோ வழங்கப்படாமல் தொழில் வழங்குனரின் விருப்பத்திற்கேற்ப ( தொழில் கேள்வி நிரம்பலுக்கு ஏற்ப ) வேதனம் நிர்ணயிக்கப்பட்டு தொழில் என்ற ரீதியல் ஏனைய உரிமைகள் சலுகைகள் உத்தரவதப்படுத்தப்படாத தொழில் துறையாகும். வீட்டு வேலை செய்பவர்கள் உட்பட நாளாந்த கூலி தொழில் செய்பவர்கள். அநேகமாக இத்துறையில் பெண்களே அதிகமாக இருக்கின்றனர். இந்த கொவிட் நிலைமை இவர்களது தொழிலையும் இல்லாமல் ஆக்கி அவர்களது வருமானத்தையும் இல்லாமல் ஆக்கியுள்ளது.

முறையற்ற தொழில்துறை. அதாவது ஒரு வாரத்திற்கு வேலை செய்துவிட்டு பின்னர் தொழில் என்று இருப்பவர்கள் பின்னர் மீண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்யும் பகுதியினர். இலங்கையில் இந்த மூன்று தொழில் துறையும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கின்றது.

சிறு கைத்தொழிலில் ஈடுபடுகின்றவர்கள், கைவினைப் பொருட்களை செய்பவர்கள், சுற்றுலா தொழில்துறை, குடிசைக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பெண்களே. இந்த நிலைமை காரணமாக இந்த தொழில் துறையை சார்ந்துள்ள பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி - தொழிலாளர் உரிமையை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களுக்கு கண்ணியமான வேலையை வழங்குவதற்குமான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் C190 பிரகடனம் இலங்கையில் அமுலாக்கப்படாதமையில் தொழிலாளர்கள் எவ்வாறான பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர்

பதில் - தொழிலாளர் உரிமையை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களுக்கு கண்ணியமான வேலையை வழங்குவதற்குமான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் C190 பிரகடனத்தை இலங்கை அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை ( ( not ratified yet)) . அதனால் இலங்கையில் தொழிலளர்களுக்கு அதாவது கண்ணியமான தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு பொறுப்புக் கூறல் மற்றும் தொழில் வழங்குனர்கள் அதனை உறுதிப்படுத்தாத படசத்தில் இதற்கு அழுத்தம் கொடுக்கும் வகிபாகத்ததை தனி நபருக்கு, சிவில் சமூகத்திற்கு தொழிற் சங்கங்களுக்கு சரிவர செய்ய முடியாத நிலை காணப்படுகின்றுது

வேலைத்தளம் என்றவுடன் அநேகருக்கு அது ஒரு கட்டிடம் அல்லது குறிப்பிட்ட ஒரு பிரதேசம் என்ற சிந்தனை வருவது இயல்பு. ஆனால் ஓரு நபர் தனது தொழிலுடன் நேரடியாக, மறைமுகமாக தொடர்புபட்ட கண்ணுக்கு புலனாகும் புலனாகாத எல்லா பிரதேசங்களும் வேலைத்தளம்தான்.  இணையவழி, மற்றும் போக்குவரத்து, தேயிலை மலை, போன்றவையும் இதில் உள்ளடக்கப்படுகின்றன.
பெரும்பாலா முறை சார்ந்த மற்றும் முறை சாரா தொழிற்றுரையில் அதாவது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஓழுங்குபடுத்தப்படாத தொழிற் துறையில் தொழில் புரிகின்றனர். இந்த பால்நிலை தொடர்பான பிற்படுத்தப்பட்ட சமூக சிந்தனைகளினால் இத்துறைகளிலும் பெண்கள் அதிகளவான வன்முறைகள் பாரபட்சங்கள் ஒடுக்கு முறைகள் மற்றும் அநீதிகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அன்மையில் காலி கரபிட்டிpய வைத்தியசாலையில் தொடர்நது பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறைக்கு முகம் கொடுத்த வைத்தியரின் சம்பவம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் பெண் ஊளியருக்கு எதிராக (வெளிவந்தவற்றில்) இடம்பெற்ற வன்முறைகள் நல்ல எதாரணங்கள். முறைசார்ந்த துறையில் வன்முறை மற்றும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்ட ஏற்படுகள் இருக்கும் போதே தொழிற் துறையில் இவ்வாறெனின் முறை சாராதுறையின் நிலைமையை பற்றி கேட்கத் தேவையில்லை. இங்கு தொழிற்சங்கங்கள் சற்று பலமான நிலையில் இருப்பதினாலும தற்போது அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பலமான் முறையில் முன்னெடுக்கப் படுகின்றன

ஆனால் இம் முறைசார துறையில் தொழிலாளர்கள் நிலையான, குறிப்பிட்ட இடத்தில் அதிகளவான ஊழியர்கள் இல்லாமையினால் அநேக தொழிற்கங்கங்கள் இவர்களை அணி திரட்டுவதோ, அவர்களின் உரிமை தொடர்பில் போரடுவதோ இல்லை. இதனால் இங்கு தொழில் புரியும் அநேகர் விசேடமாக பெண்கள் தொழில் தருனருடன் பேரம் பேசும் ஆற்றலும் அது தொடர்பான விழிப்புணர்வு அறிவு மற்றும் பலம் குறைவு என்ற காரணத்தினாலும் மேலும் மேலும் தாக்கத்தமிற்கும் துன்புறுத்தல் களுக்ககும் உள்ளாகின்றனர்.
பொதுவாகவே பெண்கள் தொடர்பான உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அசமந்த போக்கை கடைபிடிக்கும் ஆண்மைத்துவ (அயளஉரடinவைல ) சிந்தனை கொண்ட அரசியல் வாதிகள் , கொள்கை வகுப்பாளர்கள் பயங்கரவாதம் உள்நாட்டு பாதுகாப்பு, இரானுவ தளபாடங்கள் மற்றும் இரனணுவ செலவுகள் தொடர்பில் அதிக கரிசணை கொள்ளும் இவர்கள் இவற்றை இன்னும் பொருளாதாரப் பிரச்சினையாகவோ அபிவிருத்தி பிரச்சினையாகவோ நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினையாகவோ பார்க்க விpரும்புகிறார்கள் இல்லை.
சுமார் 9,000,000(தொழில் என்று அங்கீகரிக்கப்பட்ட) தொழிற்படையை கொண்ட இலங்கையில் பெண்கள் 34.75மூ காணப்படுகின்றனர் இப் பெண்கள் உட்பட சில ஆண்களுக்கும் ஏற்படும் வேளைத்தள பாரபட்சம் பாலியல் தொல்லை பாதுகாப்பற்ற வேலைச் சூழல் தொடர்பில் அக்கறை செழுத்தாத அரசாங்கம் தொழில் என்று அங்கரிக்காத வீட்டுவேலை பணியாளர்கள் இலங்கையில் சுமார் 87000 பேர் இருப்பதாக அதிலும் 60400 பெண் தொழிலாளர்கள் இருகப்பதாக தொழிற்படை சம்பந்தமான 2007 ல் நடாத்தப்பட்ட ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் இதனை விட மோசமான வேலைச் சூழலியேயே தொழில் புரிகின்றனர்
இவ் சி 190 யை அங்கீகரிக்கததன் காரணமாக முறைசாரா துறைகளில், தனியார் துறைகளில் இடம்பெறும் இந்த பாலியல் ரீதியான தொந்தரவுகள் தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

இவ் C 190 யை அரசு அங்கீகரிப்பதன் ஊடாக இத்துறையலிருக்கும் ஊழியர்களுக்கு விசேடமாக பெண் ஊழியர்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பையாவது உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

கேள்வி - தற்போதைய நிலையில் பால்நிலை சமத்துவம் தொடர்பில் பெருமளவான விழிப்புணர்வு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்ற போதும் ஏன் பெருமளவான ஆண்களுக்கு எதிர்த்து குரல் கொடுக்கின்றார்கள் இல்லை? பெண்களுக்கு எதிரான இந்த சமத்துவமின்மையின்மையை முடிவுக்குக் கொண்டுவர முடியாத ஒரு நிலை இருக்கின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில் - இதற்கு ஆண் என்று ஒருவரை சமூகம் சித்தரித்துக் காட்டும் ஒரு வடிவமே பிரதான காரணமாகும். அதாவது ஆண் என்பவர் அதிகாரம் மிக்கவராகவும் வன்முறையாளராகவும் ஒருவரை கட்டுப்படுத்தக் கூடியவராகவும் தகாத வார்த்தை பேசுபவராகவும் மது அருந்துபவராகவும் இருக்க வேண்டும் என்றும் பாலியல் ரீதியாக பெண்களை கட்டுப்படுத்த கூடியவராகவும் இந்த சமூகம் சித்தரித்து காட்டுகின்றது.

வீட்டில் சமைத்தால் உடைகளை கழுவினால் அல்லது பிள்ளைகளுக்கு உணவு ஊட்டினால் துன்பத்தில் அழுதால் பெண்ணை போல நீ இருக்கின்றாய் என்று சமூகம் ஒரு ஆண் நரை கேள்விக்கு உட்படுத்துகிறது. அன்பாக பழகுதல் பிள்ளைகளை பராமரித்தல் சண்டை வரும்போது அமைதியாக இருத்தல் என்பன ஒரு நல்ல மனிதருக்கு இருக்கக்கூடிய பண்பாகும். ஆனால் நல்ல பண்புகளை பெண்களுக்குரிய பண்புகளாக்கி மோசமான குணங்களே ஆண்களுக்கு வழங்கியுள்ளனர். எனவே ஆண்கள் இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முயற்சித்தால் அவர்களை பெண்களாக சித்தரிக்கின்றனர். சில பெண்கள் கூட ஆண்கள் இப்படியாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர் ஆனால் இது அவர்களின் தவறல்ல. சமூக ரீதியான கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட தவறு எனவே இந்த நிலைமையை மாற்ற வேண்டும். வன்முறை பிரச்சினைக்கு தீர்வல்ல அத்துடன் வன்முறையற்ற பாரபட்சம் மற்ற சமத்துவமதன சூழல் விசேடமாக வீடு, சமூகம் வேலைத்தளம், ஆண் பெண் சிறுவர் வயோதிபர் பால் புதுமையினர் மாற்றத் திறனாளர் போன்ற அனைவருக்கும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ மிக முக்கியமான அம்சமாகும். எனவே ஆண்களுக்கு சமூகத்தால் புகுத்தப்பட்டிருக்கும் ஆண்மைத்துவ சிந்தனையை சுய விமர்சனம் செய்து அதற்கு புது வரைவிலக்கணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

வீரசிங்கம்
பால்நிலை சமத்துவம் மற்றும் முரண்பாட்டுக் கூருணர்வு நிபுணர்
மனித உரிமை செயற்பாட்டாளர்
பால்நிலை சமத்துவத்திகு ஆண்களின் ஈடுபாட்டிற்கான கூட்டமைப்பு

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image