அசமந்தபோக்கு காரணமாக பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் சிக்கல்

அசமந்தபோக்கு காரணமாக பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் சிக்கல்

பொது நிருவாக அமைச்சின் செயலாளரின் அசமந்த போக்கு காரணமாக நிரந்தர நியமனம் பெறவுள்ள பட்டதாரிகள் சிக்கலை எதிர்நோக்க ​வேண்டியுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு நேற்று (31) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 2019ம் ஆண்டு பட்டதாரி பயிலுநர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண அரச சேவையில்கீழ் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளின் பெயர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு நிறுவன பிரதானிகளுக்கு தெரியப்படுத்துமாறு கடந்த பெப்ரவரி மாதம் 12 திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அமைச்சினூடாக பிரதேச சபைகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தீர்கள். இது தொடர்பில் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தெரியப்படுத்தப்படிருந்தது.

தற்போது வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ தவிரந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் 2019ம் ஆண்டு சேவையில் இணைத்துகொள்ளப்பட்ட பட்டதாரிகள் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசில் இருந்து மாகாணசபை அரச சேவையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் நேற்று வரை மாகாணசபைகளுக்கு கிடைக்கப்பெறவில்லை. இதனால் மாகாண அரசசேவையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த பட்டதாரி பயிலுநர்களை ஏப்ரல் முதலாம் திகதி சேவையில் இணைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே 6 மாகாணங்களில் 2019ம் ஆண்டு பட்டதாரி பயிலுநர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனவே மேற்படி விடயம் தொடர்பில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் விரைவில் பட்டதாரி பயிலுநர்கள் பெயர் விபரங்களை மாகாணசபைகளுக்கு பெற்றுகொடுத்து நிரந்தர நியமனம் வழங்கும் செயற்பாட்டை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image