பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்ள தகுதியிருந்தும் 24/11/2020, 11.12.2020 மற்றும் 05.01.2021 அகிய தினங்கள் வௌியாகிய பெயர் பட்டியலில் இடம்பிடிக்காத பட்டதாரிகளை அடுத்த கட்டமாக இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என்று அபிவிருத்தி சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளரும் பட்டதாரிகள் மத்திய நிலையத்தின் அழைப்பாளருமான சந்தன சூரியாராய்ச்சி அறிவத்துள்ளார்.
07.01.2021 அன்று தேசிய பட்டதாரிகள் மத்திய நிலைய பிரதிநிதிகளுக்கும் பொதுச் சேவை அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பயிற்சியில் இணைக்க தகுதியிருந்தும் பெயர் பட்டியலில் இடம்பெறாத பட்டதாரிகளின் விபரங்கள் ஏலவே சேகரிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் விரைவில் அனுப்பப்படவுள்ளன. அவர்கள் 02.01.2021 குழுவைச் சேர்ந்தவர்களாக பயிற்சியில் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் சந்தன லியனாராய்ச்சி தெரிவித்துள்ளார்.