பயிற்சி நிறைவு செய்த பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக்கடிதங்கள் விரைவில்
பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், தொடர்ந்தும் உங்கள் உரிமைகளை மீட்டெடுக்க போராட தயாராகவுள்ளோம் என்று அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கத்தின் செயலாளரும் பட்டதாரிகள் தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளருமான சந்தன சூரியராய்ச்சி தனது முகநூல் பக்க்தில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பயிற்சியை நிறைவு செய்த பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைக்கும் பணிகள் நேற்று (13) ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும 18ம் திகதிவரை இந்நடவடிக்கைகளை பொது நிருவாக அமைச்சின் சேவை இணைப்பு பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.த அதன் பின்னர் நிரந்தர நியமனக் கடிதங்கள் உரிய பிரிவுகளில் பிரதியுடன் கிடைக்கும்.
உங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைப்பதற்கான தொழிற்சங்கம் என்றரீதியில் நாம் தொடர்ச்சியாக போராடி வந்தோம். அதேபோன்று உங்களுக்கான நிரந்தர நியமனங்கள் கிடைத்த பின்னரும் சேவைக்கான தொழிற்சங்கம் என்றரீதியில் உங்களை மிக மகிழ்வுடன் வரவேற்பதுடன் தொழில்ரீதியாக நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தோள்கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.