தற்போது நாட்டில் நிலவும் சுகாதார நிலைமை காரணமாக பட்டதாரி பயிலுநர்களை நேரில் அழைத்து தகுதிகாண் பரீட்சை நடத்த முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. எனினும் இச்செயற்பாட்டை விரைவில் நிறைவு செய்யும் நோக்கில் பொது சேவை ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் பயிலுநர் அதிகாரிகள் அழைக்கப்படாமல் தகுதிகாண் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
குறித்த அதிகாரிகளுக்கு ஒன்லைன் ஊடாக தகுதிகாண் பரீட்சை முன்னெடுக்கப்பட்டது. ஒரு வார குறுகிய காலத்தினுல் 12,000 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அமைச்சுக்கு அனுப்பவேண்டியுள்ளது.
சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் கணனி மென்பொருளில் உள்ளடக்கப்படவுள்ளது. இந்நிலையில் ஆவணங்களில் குறைப்பாடுகள் இருப்பின் அவற்றை பரிசோதிப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே கடந்த வாரம் ஒன்லைன் மற்றும் தொலைபேசியூடாக அதிகாரிகள் பட்டதாரி பயிலுநர்களை தொடர்புகொண்டு தகவல் பெற்று வருகின்றனர். (மிக அவசிய தேவை கருதியே குறித்த தொடர்புகள் ஏற்படுத்திக்கின்றமையை கருத்திற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.)