Voice of Migrant Network இணைய உங்களுக்கும் வாய்ப்பு!

Voice of Migrant Network இணைய உங்களுக்கும் வாய்ப்பு!

நீங்கள் தற்போது வெளிநாட்டில் வேலை செய்கிறீர்களா? வெளிநாட்டில் பணியாற்றிய பின் நாடு திரும்பியவரா? அல்லது வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்ல எதிர்பார்த்துள்ளவரா? Voice of Migrant Network (VoM) உங்கள் அனைவருக்கும் ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் வலையமைப்பின் குரல் (Voice of Migrant Network) என்பது தேசிய மற்றும் கீழ் மட்ட தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பல மாவட்டங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிற்சங்கங்களின் தன்னார்வ கூட்டணியாகும், மேலும் இது புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டில் பணியாற்றி நாடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வலையமைப்பாகும்.

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொழிலாளர் இடம்பெயர்வு பற்றி விவாதிக்கப்பட்ட ஒரு தேசிய ஆலோசனைக்கமைய Voice of Migrant வலையமைப்பு உருவாக்கப்பட்டது. அன்று தொடக்கம் புலம்பெயர் தொழிலாள சட்டத்தரணிகள் நேரடியாகும் நிகழ்நிலை மூலமாகவும் புலம்பெயர் தொழிற்றுறை முகங்கொடுக்கும் பிரச்சினைகள் கலந்துரையாடியுள்ளதுடன் செயற்றிட்டங்கள், முன்மொழிவுகளை முன்வைத்து உரிய தரப்பினருடன் இணைந்து செயற்படுகின்றனர்.

13 மாவட்டங்களைச் சேர்ந்த 16 சிவில் அமைப்புக்கள், 5 தொழிற்சங்கங்கள் மற்றும் 409 புலம்பெயர் அமைப்புக்கள் இவ்வலையமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் தொழிற்றுறை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பாக தேசிய, மாவட்ட, உப பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் ஆலோசனை வழங்கல், பயிற்சிகள், பிரசார செயற்பாடுகள், தௌிவுபடுத்தல் செயற்பாடுகள், ஆய்வுகள் மற்றும் மீளாய்வுகள் என அனைத்து வகையிலும் செயற்படுகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பங்களின் நலனுக்காக சேவையாற்றும் நிறுவனங்கள், தனிநபர்களை இணைத்துக்கொண்டு இவ்வலையமைப்பை விரிவாக்க எதிர்பார்த்துள்ளோம். எனவே, Voice of Migrant Network (VoM) வலையமைப்பில் இணைய விரும்புபவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கோருகிறோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

  • கோரிக்கைக் கடிதம்
  • நிறுவனம் பதிவுச் சான்றிதழ் (இருப்பின்)
  • அமைப்பின் யாப்பு அல்லது சங்க வரைவு

 

VOICE OF MIGRANTS COALITION

Caritas Sri Lanka – SEDEC
Catholic Commission
Center for Human Rights and Community Development (CHRCD)
Community Development Services (CDS)
Darani Swashakthi Padanama
Eastern Self-Reliant Community Awakening Organisation (ESCO)
Helvetas Swiss Intercooperation
Migrant Societies – Batticaloa, Ampara, Hatton, Galle, Mathara and Kurunagala
Migrant Workers’Association Killinochchi
Migrant Workers Front
National Union of Sri Lanka Seafarers (NUSS)
National Workers Congress (NWC)
Plantation Rural Education Development Organization (PREDO)
Power Foundation
Protect Union
Safe Foundation
Saviya Organization - Galle
Social Organizations Networking for Development (SOND)
Social Welfare Organization Ampara District (SWOAD)
Solidarity Center (American Center for International Labor Solidarity)
Sri Lanka Nidahas Sevaka Sangamaya (SLNSS)
Stand Up Movement
Women and Media Collective

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image