வாரத்தில் நான்கரை நாட்கள் மாத்திரமே வேலை- UAE அறிமுகம்

வாரத்தில் நான்கரை நாட்கள் மாத்திரமே வேலை- UAE அறிமுகம்

வார இறுதி நாட்களில் பணி ​நேரத்தை நான்கரை மணி நேரமாக குறைக்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் வௌ்ளிக்கிழமை பிற்பகல், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வார இறுதி நாட்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி, டுபாய் அரசுகளும் புதிய வார இறுதிநாள் கட்டமைப்பை பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளன.

 இப்புதிய நடைமுறையானது அரசாங்க ஊழியர்களுக்கான புதிய வேலை நேரத்தைக் குறிக்கிறது, தற்போது திங்கள் முதல் வியாழன் வரை வேலை நாட்கள் 7.30 மணிக்கு தொடக்கம் மாலை 3.30 மணி வரை ஆகும். வௌ்ளிக்கிழமைகளில் 7.30 முதல் 12.00 மணி வரை பணி நேரமாகும்.

எமிரேட்ஸ் முழுவதும் வெள்ளிக்கிழமை பிரசங்கங்கள் மற்றும் பிரார்த்தனைகள் பிற்பகல் 1.15 மணி முதல் நடைபெறும். அரசாங்க ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், அவர்களின் வேலை நேரத்தை நெகிழ்வு நேர அடிப்படையில் ஏற்பாடு நெகிழ்வு நேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,

சர்வதேச ரீதியில் கிழமைக்கு 5 வேலை நாட்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் ஐந்து நாட்களை விடவும் குறைந்த வேலை நாட்களை வழங்கியுள்ள முதல் நாடு ஐக்கிய அரபு இராச்சியம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image