ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளில் தூசுடன் கூடிய வேகமான காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மணிக்கு 55 கிலோமீற்றர் வேகத்துக்கு தூசுடன் கூடிய காற்று வீசக்கூடும் என்றும் ஷஹீன் சூறாவளியினால் இன்று மாலை 3.00 மணி தொடக்கம் தூசுக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது..
இன்று இரவு மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதுடன் சுழல் காற்று வீசுவதற்கான சாத்தியங்களும் காணப்படுவதால் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தூசுக்காற்று, சுழல் காற்று என்பவற்றின் காரணமாக சுமார் 500 மீற்றர் வரை வீதிகள் தௌிவின்றி இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அல் அயின் பிரதேசங்களில் மஞ்சள் நிற மணற்புயல் ஏற்படும் என்றும் டுபாயின் ஹட்டா பிரதேசத்தில் சிறிதளவு மழைப் பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது