இலங்கையர்கள் UAE நுழைய நிபந்தனைகளுடன் அனுமதி!

   இலங்கையர்கள் UAE நுழைய நிபந்தனைகளுடன் அனுமதி!

நிபந்தனைகளுடன் இலங்கையர்களை நாட்டுக்குள் வர அனுமதிப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) அறிவித்துள்ளது
பிரதான ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எத்திஹாட் இதனை அறிவித்துள்ளன.

அதற்கமைய அமீரகத்தை கடந்து செல்லும் பயணிகள் தமது இலக்கை அடைவதற்கு புறப்படு நேரத்திற்கு 72 மணி அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட எதிர்மறையான பிசிஆர் பரிசோதனை சான்றிதழை வைத்திருத்தல் கட்டாயமாகும்.

 

அமீரகம் மீள திரும்ப விரும்பும் அமீரக வதிவிட வீசா வைத்திருக்கும் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அந்நாட்டு அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ சான்றிதழ்களை வைத்திருப்பது கட்டாயமாகும். முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு குறைந்தது 14 நாட்கள் கடந்திருக்கு வேண்டும்.

எனினும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கோல்டன் மற்றும் சில்வர் மற்றும் ராஜதந்திர வீசா வைத்திருப்பவர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள், துறைசார் நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட கல்வித்துறைசார் ஊழியர்கள், அரச ஊழியர்கள் மற்றும் EXPO 2020 கீழ் ஸ்பொன்சர்ஷிப் பெற்ற தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இந்நடைமுறை செல்லுபடியாகாது.

இதேவேளை, டுபாய் வீசா வைத்திருப்பவர்கள் அந்நாட்டு பொது குடிவரவு மற்றும உள்நாட்டு அலுவல்கள் பணியகத்திற்கு விண்ணப்பித்து முன்னனுமதி பெற்றுக்கொண்ட பின்னர் மாத்திரமே நாட்டுக்குள் நுழைய முடியும். அத்துடன் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் அதாவது மாதிரி பெற்றுக்கொண்டதற்கும் விமானம் புறப்படுவதற்கும் நேரத்திற்கு இடைப்பட்ட 48 மணி ​நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் இருத்தல் வேண்டும். அச்சான்றிதழ் QR குறியீடு உண்மையான பரிசோதனை முடிவுடன் தொடர்புபட்டு இருத்தல் மிக அவசியம். அது மாத்திரமன்றி விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் ரெபிட் அன்டிஜன்ட் பரிசோதனை செய்து பரிசோதனை முடிவு எதிர்மறையானதாக இருக்கவேண்டும். அதேபோல் டுபாய் வந்தவுடனும் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்வது கட்டாயமாகும். ஐக்கிய அரபு இராச்சிய குடிமக்களுக்கு இந்நடைமுறையில் விலக்கு அளித்துள்ள போதிலும் வந்தவுடன் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தினால் வழங்கப்பட்ட கொவிட 19 தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டு 14 நாட்கள் நிறைவடைந்த செல்லுபடியாகும் வதிவிட வீசா வைத்திருக்கும் பயணிகள் அந்நாட்டு சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தடுப்பூசி வழங்கப்பட்டதற்கான சான்றிதழ், (அல் ஹோஸ்ன் செயலியில் உள்ள சான்றிதழ் உட்பட) பயன்படுத்தி UAE திரும்ப முடியும்.

இதேவேளை, uaeentry.ica.gov.ae என்ற இணையதளத்தில் பிரவேசித்து அதிலுள்ள முன்னனுமதி அனுமதிப்பத்திரத்தை பூர்த்தி செய்து நுழைவுக்கான அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும். UAE வதிவிட அனுமதி பெற்ற முழுமையாக பயணிப்பதற்கு முதல் 14 நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்திகொண்ட பயணிகள் அச்சான்றிதழை (https://smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/registerArrivals) என்ற அந்நாட்ட Identity and Citizenship இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.

QR குறியீட்டைக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் இருந்து புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் பயணிகள் எதிர்மறை PCR சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். ஆரம்ப விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்கு ரெபிட் பிசிஆர் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். இலக்கை வந்தடைந்தவுடன் . கண்காணிப்பு மருத்துவ பட்டி அணிவிக்கப்பட்டு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பயணிகள் தங்கள் இறுதி இலக்குக்குள் அனுமதிக்கப்படுவதை போக்குவரத்து பயணிகள் உறுதி செய்ய வேண்டும். QR குறியீடு அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட சோதனையின் எதிர்மறை PCR அறிக்கைகள் அல்லது இறுதி இலக்கு PCR செல்லுபடியாகும் தேவை, அதிக கட்டுப்பாடு இருந்தால், தேவைப்படும்.

 

இடைத்தங்கல் பயணிகள் தமது இறுதி இலக்கை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் QR குறியீடுள்ள பரிசோதனைக் கூடத்தில் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image