அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 64 கோடி ரூபா வென்ற இலங்கையர்

அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 64 கோடி ரூபா வென்ற இலங்கையர்

டுபாயில் தனியார் நிறுவனமொன்றில் விற்பனை முகவராக பணியாற்றும் இலங்கையர் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பொன்றில் 12 இலட்சம் திர்ஹம் பணத்தை வென்றுள்ளார்.

36 வயதான மொஹமட் மிஷ்பான் என்ற 36 வயதான இலங்கையரே நேற்று (03) நடத்தப்பட்ட சீட்டிழுப்பில் வெற்றி பெற்று அதிர்ஷ்டசாலியாகியுள்ளார் என கல்ப் நியுஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

இத்தொகையானது இலங்கை பெறுமதியில் 643 இலட்சம் ரூபா அதாவது 64 கோடி ரூபாவாகும்.

விடுமுறைக்காக தற்போது இலங்கை வந்துள்ள அவர் கருத்து தெரிவிக்கையில், 20 பேர் இணைந்து குறித்த அதிர்ஷ்ட இலாப சீட்டை கொள்வனவு செய்துள்ளதாகவும் அதற்கமைய குறித்த நபருக்கு 600,000 திர்ஹம் சொந்தமாகும். அப்பாவுக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளவேண்டியுள்ளமையினால் இப்பணம் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மொஹமட் மிஷ்பான் மாதந்த சம்பளமாக 7000 திர்ஹம்களை பெறுகிறார். கடந்த 10 வருடங்களாக டுபாயில் பணியாற்றும் அவர் தனது நண்பர்கள் பேருடன் இணைந்து கடந்த 1 1/2 வருடங்களாக Big Ticket அதிர்ஷ்ட இலாப சீட்டை கொள்வனவு செய்து வருவதாகவும் வென்ற பணத்தில் தனது குடும்பத்தின் நிதிதேவைகளை பூர்த்தி செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கு இலங்கையில் வீடு கட்டவேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Author’s Posts