ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழிலுக்காக விண்ணப்பிப்போர் கவனத்திற்கு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழிலுக்காக விண்ணப்பிப்போர் கவனத்திற்கு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலைவாய்ப்பு நாடி விண்ணப்பிக்கப்படும் சுய விபரக்கோவைகளில் 90 வீதமானவை முகாமையாளர் கையில் கிடைக்கும் முன்னரே ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சரியான முறையில் சுயவிபரக்கோவைகள் தயாரிக்கப்படாமையினாலேயே அவை ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சேர்ப்பு மற்றும் மனிதவள ஆலோசகர்களின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு உள்ள பெரிய நிறுவனங்கள், தனது நிறுவனத்திற்கு ஊழியர்களை தெரிவு செய்வதற்காக நாளாந்தம் கிடைக்கும் சுயவிபரக்கோவைகளை தெரிவு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) முறைகளை பயன்படுத்தியுள்ளன. எனவே, சுயவிபரக்கோவைகள் சரியாக வடிவமைக்கப்படாமல், சமர்ப்பிக்கப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் சுயவிபரக்கோவைகளை உரிய நபரிடம் சென்றடையவிடாமல் செயற்கை நுண்ணறிவு தடுத்து விடுவதாக அவ்வாலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவானது சரியான முறையில் ஆட்களை சேர்ப்பதற்கான செலவழிக்கப்படும் நேரத்தை குறைப்பதுடன் தனிப்பட்ட விருப்பங்களைத் தவிர்த்து திறன்களின் அடிப்படையில் தேவையான நபர்களை தெரிவு செய்ய உதவுகிறது என்கிறார் கிழக்கு ஐரோப்பா மற்றும் மெனாவின் விற்பனைத் துணைத் தலைவரும், அடெக்கோ மத்திய கிழக்கு நாடுகளின் தலைவருமான மயங்க் படேல்.

 

ஒரு பணியமர்த்தல் முகாமையாளர் ஒரு நாளைக்கு சுமார் 200 அல்லது அதற்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெறுகிறார். செயற்கை நுண்ணறிவு முறையைப் பயன்படுத்தி பகுப்பாய்வு முகாமையாளரினால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களுக்கு அமைய அடுத்தக்கட்ட பகுப்பாய்வுக்காக 10 தொடக்கம் 20 சதவீதம் வரை தெரிவு செய்கிறது. இறுதியாக 20 வீத விண்ணப்பங்கள் மாத்திரமே பணியமர்த்தல் முகாமையாளர் பார்வைக்குச் செல்கிறது என்று படேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image