சிங்கப்பூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு பணியாற்றும் பணிப்பெண்களை வௌியில் செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும், விடுமுறைத் தினத்தில் வீட்டில் இருக்கும் பணிப்பெண்களிடம் எவ்வித சேவைகளையும் தொழில் வழங்குநர்கள் பெறக்கூடாது அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
புதிய பாதுகாப்பு விதிமுறைகளை மீறு்ம வீட்டுப் பணிப்பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று அந்நாட்டு மனித வள அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வை வீட்டில் கழிப்பது தொடர்பில் தொழில்வழங்குநர்களுக்கும் பணிப்பெண்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டும் என்றும் அவ்வாறு ஓய்வு தினத்தில் சேவையைப் பெறும்பட்சத்தில் அதற்கான இழப்பீட்டை முதலாளிமார் வழங்கவேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏதும் தேவை கருதி வௌியில் செல்வதாயின் விரைவில் குறிகிய நேரத்தில் வீடு திரும்பவேண்டும் என்றும் சன நெருக்கடியான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.