ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் இ.குஷான் இன்று (29) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைப் பெண்கள் சுற்றுலா வீசா பயன்படுத்தப்பட்டு ஓமான் அனுப்பப்பட்டு அங்கு பாலியல் தேவைகளுக்காக அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர் என்றும் மனிதக் கடத்தலில் ஈடுபட்டார் என்றும் குறித்த அதிகாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரியை கைது செய்ய நேற்று (28) பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் இன்று அதிகாலை 3.57 மணியளவில் இலங்கை வந்தடைந்த அவரை புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிகாரி மீதான குற்றச்சாட்டு வௌியாகியதையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் அவருடைய இராஜதந்திர கடவுச்சீட்டும் ரத்து செய்யப்பட்டது.
குறித்த அதிகாரி மீதான குற்றச்சாட்டு இவ்வாண்டு பெப்ரவரி மாதமே செய்யப்பட்டபோதிலும் நடவடிக்கை எடுக்க தாமதமாகியுள்ளதாகவும் பொது கணக்குகள் குழு (COPA) தெரிவித்துள்ளது.