நீண்டகால வதிவிட வீச வழங்க ஓமான் திட்டம்

நீண்டகால வதிவிட வீச வழங்க ஓமான் திட்டம்

புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசாக்களை வழங்க ஓமான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்பவர்கள் மற்றும் ஒரு சில துறைசார் வௌிநாட்டவர்கள புதுப்பிக்கக்கூடிய 5 அல்லது 10 வருட வதிவிட வீசா வழங்கும் நடவடிக்கையை ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கும் நடவடிக்கையை ஐக்கிய அரபு இராச்சியம் அண்மையில் ஆரம்பித்தது.

இதனைத் தொடர்ந்து ஓமானும் அந்நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இச்செயற்றிட்டமானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஓமான் சனத்தொகையில் 42 வீதமானவர்கள் வௌிநாட்டவர்கள் ஆவர். கடந்த 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓமான் மயமாக்கல் திட்டத்தினூடாக அந்நாட்டு குடிமக்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image