ஜோர்தானில் கொவிட் மூன்றாம் அலை

ஜோர்தானில் கொவிட் மூன்றாம் அலை

ஜோர்தானில் கொவிட் 19 மூன்றாம் அலை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தற்போது நாட்டில் வாராந்தம் சுமார் 20,000 தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுவதாகவும் கொவிட் பரிசோதனைகளில் நேர்மறையான முடிவு 8 வீதத்தால் அதிகரித்துள்ளமை கவலைக்குரிய விடயம் என்றும் சுகாதார அமைச்சின் பொதுச் செயலாளர் அடெல் பல்பிசியை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகமான பெட்ரா செய்தி வௌியிட்டுள்ளது.

எவ்வாறு இருப்பின் அவசர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தல் மற்றும் செயற்கை சுவாசக்கருவிகள் பயன்பாடு என்பன 30 வீதத்தை கடக்கவில்லை என்றும் நோயாளர்களுக்கு சிகிச்கை வழங்கும் கொள்ளவு இன்னும் பிரச்சினைக்குரியதாக மாறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தடுப்பூ வழங்கும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்ளுமாறு அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image