அவுஸ்த்திரேலிய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று வந்த இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இசுறு ஜீவந்த என்ற அத்தனகல்ல, வல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது இலங்கையர் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கணிதப்பிரிவில் உயர்தர பரீட்சையில் தோற்றிய இசுறு கம்பஹா மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரு வருட உயர்கல்வியை கற்று மேலதிக கற்கைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தநிலையில் துரதிர்ஷ்டவசமாக இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் கல்வி நடவடிக்கையை பூர்த்தி செய்ய இன்னும் 2 மாதங்கள் மாத்திரமே இருந்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவ்விளைஞரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அவருடைய நன்பர்கள் நிதியமொன்றை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.