ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக்கொள்ள அறை வாடகை 7500 ரூபாவா? 12 500 ரூபாவா?

 ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக்கொள்ள அறை வாடகை 7500 ரூபாவா? 12 500 ரூபாவா?

வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர தர ஹோட்டல்களில் தனி அறை வாடகை 7500 ரூபா என தெரிவித்த போதிலும் 12,500 ரூபாஅறிவிடப்படுவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

கலாநிதி நலிந்த சில்வா சகோதர மொழிப் பத்திரிகையான அருண பத்திரிகைக்கு எழுதியுள்ள பத்தியில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியன்மாருக்கான இலங்கை தூதுவராக பணியாற்றும் கலாநிதி நலிந்த சில்வாவின் பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த சில தினங்களுக்கு மியன்மாரில் இருந்து இலங்கை திரும்பிய சிலர் தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனி அறைக்கு நாளொன்றுக்கு 12,500 ரூபா அறிவிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அவர் எழுதிய பத்தியில் வினவப்பட்ட கேள்வி கீழே தரப்பட்டுள்ளது.

" அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக கூறும் சில விடயங்களை சில நேரங்களில் ஏற்றுக்கொள்வது சிரமமாக உள்ளது. வௌிநாடுகளில் இருந்து இலங்கை திரும்புகிறவர்கள் ஹோட்டல்களில் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு தற்போது காணப்படுகிறது. தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கிக்கொள்ளும் அறைக்கான ஆகக்குறைந்த ஒரு நாள் கட்டணம் 7500 ரூபா என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் ஹோட்டல்களில் 12500 ரூபா அறவிடப்படுகிறது. இதிலிருந்து அதிகாரிகள் அரசாங்கத்திற்கு சரியான அறிக்கையை வழங்கவில்லை அப்படியில்லையென்றால் அதிகாரகளுக்கு அரசாங்கத்தின் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது என தெரிகிறது. இது எவ்வாறு இருப்பினும் இப்பிரச்சினை அனைத்து அரசாங்கங்களுக்கும் இருந்த பிரச்சினை. அரசாங்கம் நிர்ணயிக்கும் விலைக்கு சந்தையில் பொருள் கொள்வனவு செய்ய முடியாது" என்றும் அப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image