ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மற்றுமொரு சேவை ஆரம்பம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மற்றுமொரு சேவை ஆரம்பம்!

மத்திய கிழக்கு நாடுகளில் சேவைகளை விஸ்தரிக்க உள்ளதாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விமானங்களை குத்தகைக்கு எடுக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் நட்டால் தெரிவித்துள்ளார். 

துபாய்க்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”மத்திய கிழக்கு நாடுகளிேலிருந்து இலங்கைக்கு அண்மைய நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இதனைக் கருத்திற்கொண் அவர்களின் இலங்கைக்கான பயணத்தை இலகுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதற்கமைய, இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரிக்கப்படும். இரண்டு அல்லது மூன்று புதிய விமானங்களை குத்தகைக்கு எடுப்பதன் மூலம், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை விஸ்தரிக்கப்படும் என்றார்.

மூலம் - தினகரன்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image