மனிதக் கடத்தலை தடுக்க புதிய பொறிமுறை

மனிதக் கடத்தலை தடுக்க புதிய பொறிமுறை

நாட்டின் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் ரஷ்ய - உக்ரைன் யுத்தத்தில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்படும் மனிதக் கடத்தலை தடுப்பது தொடர்பில் இலங்கை - ரஷ்ய அதிகாரிகளின் பங்களிப்புடன் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

இலங்கை பிரதிநிதிகள் குழு அண்மையில் ரஷ்யா சென்றிருந்தபோது இந்த பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. 

வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 

ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி வௌிவிவகார அமைச்சர் ஆகியோர் தமது குழுவினருடன் கலந்துரையாடியதாக அந்த குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார். 

இதன் பிரதிபலனாக குறித்த இரண்டு அமைச்சுகளினதும் அரச அதிகாரிகள் மற்றும் ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் உள்ளிட்டோர் அடங்கிய ஒன்றிணைந்த குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த மனிதக் கடத்தலை மேற்கொண்ட கடத்தல்காரர்களினால் குறித்த இராணுவத்தினரிடமிருந்து ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளதாக காமினி வலேபொட தெரிவித்தார். 

சுற்றுலா விசாவில் சென்று ரஷ்ய - யுக்ரெய்ன் யுத்தத்தில் பங்குபற்றிய நாட்டின் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image