வெளிநாடு செல்வதற்காக எவருக்கும் பணம் வழங்க வேண்டாம்

வெளிநாடு செல்வதற்காக எவருக்கும் பணம் வழங்க வேண்டாம்
பொதுமக்கள் வெளிநாடு செல்வதற்காக எவருக்கும் பணம் வழங்க வேண்டாம் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த விடயங்களை குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில்,
 
சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்வது பாரிய பிரச்சினை ஆகும். இது தொடர்பில் உங்களை தெளிவு படுத்துவதற்காக சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகின்றோம். அகப்படவேண்டாம் என்ற தொனிப்பொருளில் பிரசாரம் செய்கின்றோம்.
 
ஆனால் எவ்வளவு பிரசாரம் செய்தாலும் பொதுமக்கள் இந்த மோசடியில்  அகப்பட்டுக்கொள்கின்றார்கள். அதேநேரம் ஒவ்வொரு இடங்களிலும் வெளிநாடு செல்வதற்கு பணம் வழங்குவதும் இடம்பெறுகிறது.
 
தற்போதைய நாட்களில் இஸ்ரேல் செல்வதற்காக பணம் வழங்குவது பாரிய பிரச்சினேயாகி உள்ளது. எந்த ஒரு தொழிலுக்காகவும்  இடைத்தரகருக்கு பணம் செலுத்த வேண்டாம் என மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.
 
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்று எந்த காரியங்களை சொல்ல முடியுமோ அவற்றையெல்லாம் சொல்லி பணம் வசூலிப்பதற்கு பார்க்கின்றார்கள். எனவே வெளிநாடு செல்வதற்காக பொதுமக்கள் எவருக்கும் பணம் வழங்கக்கூடாது என்பதை அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image