சிரமங்களுக்கு மத்தியிலும் ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்சர்

சிரமங்களுக்கு மத்தியிலும் ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்சர்

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சுமார் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்க ஏற்பாடு செய்தோம். பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகளை வழங்குவதில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், 2700 Smart Board களை, பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முழுமையான பாடசாலை வலயமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதே எமது திட்டமாகும். மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க 400 மில்லியன் டொலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது. - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image