கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் பயணப்பொதி சோதனை இயந்திரங்கள் என்பன நிறுவப்பட்டுள்ளன.

பயணிகள் நெருக்கடியை தீர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவை மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவன இவற்றை அறிமுகப்படுத்தியுள்ளன.

தானியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்களின் மூலம் பயணிகள் தமது இருக்கைகளைத் தெரிவு செய்தல், தமது பயணச்சீட்டுகளை அச்சிடுதல் மற்றும் பயணப் பொதிகளுக்கான அடையாள குறியீட்டை அச்சிடுதல் உள்ளிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் பயணப்பொதிகள் சோதனை இயந்திரங்களுக்குச் சென்று, பயணிகள் தமது பயணப்பொதிகளை வைத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு அனுமதி பெறும் நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image