வௌிநாட்டுப் பணிப்பெண்களை பணிக்கு அமர்த்தல் தொடர்பில் அமைச்சரின் கருத்து

வௌிநாட்டுப் பணிப்பெண்களை பணிக்கு அமர்த்தல் தொடர்பில் அமைச்சரின் கருத்து

வெளிநாடுகளில் வீட்டுப்பணிப்பெண்ணை பணிக்கு அமர்த்தவிரும்பும் ஒருவர் அதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

முறைசாரா ஊழியர்களுக்கு தொழில் கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதற்காக 'கரு சரு' வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுப்பணிப்பெண்களுடன் திங்கட்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதேபோன்ற நடைமுறை நமது நாட்டிலும் இருக்க வேண்டும். தொழில் ரீதியிலான அனுமதி பத்திரம் வேண்டும். இதற்கு வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கு வீட்டுப்பணிப் பெண் NQV தரம் ஒன்று இரண்டு மூன்று என்ற தொழில் தகுதி நிலைக்கு தகுதிக்கு வழிவகை செய்து கொடுப்பதே எமது நோக்கமாகும் எனவே, இந்த விடயங்களை விரிவுபடுத்தி அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு கட்டமைப்பை  தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்குமாறு அமைச்சரவைக்கு பரிந்துரைத்தோம்.

6 மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டத்தை அமைச்சரவை முன்வைக்க வேண்டும் என்று அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image