கனடாவில் பிரதி அமைச்சராக இலங்கைப் வம்சாவளிப் பெண்ணொருவர் முதற்தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூஷாரா வில்லியம்ஸ் என்ற இலங்கை வம்சாவளிப் பெண் உள்நாட்டு விவகார பிரதியமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 19ம் திகதி தொடக்கம் பிரதியமைச்சராக பணிகளை ஆரம்பித்துள்ளார்.
ஆரம்ப காலங்களில் கொழும்பில் வசித்த குறித்த பெண், கொழும்பு பெண்கள் கல்லூரியில் கற்றுள்ளார் என்று வௌிநாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த 1991ம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்த இவர் டெரொண்டோவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் உயர் கல்வியை மேற்கொண்டுள்ளார்.
இவர் இலங்கையில் வசித்த காலப்பகுதியில் அரச கொள்கை தொடர்பிலான ஆய்விலும் பங்களிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.