பாதுகாப்பு இல்லத்தை விட்டு வௌியேறும் வீட்டுப்பணிப்பெண்களை எச்சரிக்கும் தூதரகம்!

பாதுகாப்பு இல்லத்தை விட்டு வௌியேறும் வீட்டுப்பணிப்பெண்களை எச்சரிக்கும் தூதரகம்!

 சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லத்தை விட்டு வெளியேறும் எந்தவொரு வீட்டுப் பணிப்பெண்களையும் மீண்டும் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என்று ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் மோசமாக நடத்தப்படுவதாக அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் காணொளிகளை வௌியாவதை சுட்டிக்காட்டி குறிப்பிட்டு ஓமானுக்கான இலங்கை தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தூதரக பணியாளர்களை வாய் மொழி மூலமாகவோ உடல் ரீதியாகவோ தாக்கும் அல்லது பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் வீட்டுப் பணியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஓமானுக்கான இலங்கை தூதரகம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

பணியிடங்களை விட்டு சட்டவிரோதமாக வௌியேறும் பணிப்பெண்களுக்கு தூதரகத்தின் கீழியங்கள் பாதுகாப்பு இல்லத்தில் தற்காலிகமாக தங்குவதற்கு இடமளிக்கப்படுகிறது. அங்கு அவர்கள் பாதுகாப்பாக தங்குவதுடன் அவர்களுக்கு அவசியமான உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகின்றன.

தற்போது அப்பாதுகாப்பு இல்லத்தில் 70 பணிப்பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லத்தை விட்டு வௌியேறியுள்ளதுடன் வன்முறையுடன் கூடிய போராட்டத்தை அமைச்சின் முன்பாக கடந்த 8ம் திகதி முன்னெடுத்தனர். அத்துடன் சிரேஷ்ட பெண் ஊழியர்கள் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இந்நிலைமையானது தூதரக ஊழியர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் அந்நாட்டு பொலிஸார் தலையிட்டு தூதரகத்திற்கு பாதுகாப்பையும் வழங்கியுள்ளனர்.

தற்போது பொலிஸாரின் அறிவுறுத்தலையும் மீறி மேலும் 20 வீட்டுப் பணிப்பெண்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோமான முறையில் பணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள். இத்தகைய செயற்பாட்டினூடாக விரைவில் நாட்டுக்கு திரும்ப செல்ல முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்றும் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image