இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

இஸ்ரேலில் பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.

தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடனான சந்திப்பின் போது இலங்கை வருகைத் தந்துள்ள இஸ்ரேல் விசேட பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இவ்வாண்டு இரண்டாயிரம் வேலைவாய்ப்புக்களை இலங்கையர்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள பிரதிநிதிகள் குழு, சேவையில் இணைப்பதற்கான நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதன்படி, தாதியர் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பணிக்கு செல்வதற்கான அடிப்படை தகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனித்து உரிய தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்பதை அமைச்சர் உறுதி செய்தார். நிபுணத்துவப் பயிற்சி பெற்ற ஆங்கில மொழிப் புலமை கொண்ட இலங்கைத் தொழிலாளர்களுக்கு இஸ்ரேலிய தொழில் வாய்ப்புக்களுக்கான வாய்ப்பு எப்போதும் இருப்பதாகவும், வருடத்திற்கு 8,000 தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்கத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இஸ்ரேலில் செவிலியர் வேலைகளை வழங்குவதற்காக பணம் எடுக்கும் எந்தவொரு இடைத்தரகர்களும் தங்களுக்கு அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று இஸ்ரேலின் மக்கள்தொகை மற்றும் இடம்பெயர்வு ஏஜென்சியின் பிரதிநிதிகள் கோரினர்.

மேலும், இதுபோன்ற தகவல்களை அளிக்கும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். தொழிலாளர் ஆட்சேர்ப்பு செயல்முறையின் மூலம் பணம் பெறுபவர்களுக்கு எதிராக இஸ்ரேலிய சட்டத்தின்படி அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூதுக்குழு உறுதியளித்தது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image