இத்தாலி, மிலானோ நகர உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!

இத்தாலி, மிலானோ நகர உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!

இத்தாலி மிலானோ நகரில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இலங்கைப் பெண்ணொருவர் பெற்றுள்ளார்.

தம்மிக்க சந்திரசேக்கர என்ற பெண்ணே போட்டியிட தகுதி பெற்றுள்ளார்.

அவர் தற்போது ஆளும் பி.டி. எனப்படும் பார்ட்டிட்டோ டெமாக்ரட்டிகோ கட்சியில் போட்டியிடுகிறார்.

 1984 ஆம் ஆண்டு இத்தாலிக்கு புலம்பெயர்ந்த அவர், இத்தாலியின் மிலானோ நகரில் இத்தாலிய குடியுரிமை பெற்று பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு தற்போது பிரபலமான நபராக மாறியுள்ளார்.

தாம் 38 வருடங்களாக மிலானில் வசித்து வருவதாகவும், முழு புலம்பெயர்ந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், இந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறுகிறார்.

தனது தேர்தல் வெற்றியின் பின்னர், இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்தவும், அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் உறுதியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image