இலங்கை வருவோருக்கு கொவிட் தடுப்பூசி சான்றிதழ் விதி தளர்வு

இலங்கை வருவோருக்கு கொவிட் தடுப்பூசி சான்றிதழ் விதி தளர்வு

வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்கள் பூரணமாக கொவிட் தடுப்பூசி செலுத்தியமைக்கான சான்றிதழை சமர்ப்பித்தல் உள்ளிட்ட விதிமுறைகள் தளர்த்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இன்று (7) முதல் அமுலாகும் வகையில் இந்த விதிமுறைகள் தளர்த்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், எந்தவொரு விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக நாட்டிற்குள் நுழையும் எந்தவொரு நபரும் பீசிஆர் மற்றும் ரெபிட் அன்டிஜன் உள்ளிட்ட பரிசோதனையையோ அல்லது கொவிட்-19 தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழையோ சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டுப் பிரஜைகள் அல்லது சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தரையிறங்கிய பின்னர் கொவிட்-19 தொற்று உறுதியானால் அவர்கள் ஏழு நாட்களுக்கு ஒரு தனியார் மருத்துவமனை, விடுதி அல்லது அவர்கள் வசிக்கும் இடத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image