அமெரிக்கா செல்ல பொறுமையாக விண்ணப்பியுங்கள்!

அமெரிக்கா செல்ல பொறுமையாக விண்ணப்பியுங்கள்!

வௌிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பை ஏற்படுத்தும் கிறீன்கார்ட் எனப்படும் அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டத்திற்கு இணையதளம் ஊடாக விண்ணப்பிப்பவர்கள் பொறுமையான தொடர்ந்து முயற்சித்து விண்ணப்பிக்குமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டுக்கான US Diversity Visa Program 2024 இம்மாதம் 5ம் திகதி விண்ணப்பிப்பதற்கான வாய்ப்ப்பு வழங்கப்பட்டது. வழங்கப்பட்டிருந்த இணையதளம் ஊடாக விண்ணப்பிக்க முயற்சிக்கும் போது சிலருக்கு 'Error" என பதில் வந்ததையடுத்து, அதற்கு விளக்கமளிக்கும் வகையில் அமெரிக்க தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பொறுமையாக தொடர்ந்து முயற்சி செய்து விண்ணப்பிக்குமாறு கோரியிருந்தது.

உலகளவில் விண்ணப்பிப்பவர்களுடைய எண்ணிக்கை அதிகம் என்பதனால் இவ்வாறான தகவல் வருவதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வருடாந்தம் எழுந்தமானமாக உலகம் முழுவதிலும் இருந்து 50,000 பேர் பன்முகத்தன்மை விசா திட்டத்தினூடாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையைப் பெறுகின்றனர். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி இரவு 10.30 ஆகும்.

விண்ணப்பிப்பதற்கு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image