இலங்கையர்கள் சந்திக்கவுள்ள மன்னர் சார்ள்ஸ்

இலங்கையர்கள் சந்திக்கவுள்ள மன்னர் சார்ள்ஸ்

பிரித்தானியாவின் புதிய மன்னராக முடிசூடப்பட்ட சார்ள்ஸ் 111 முதற்தடவையாக பொதுமக்களை சந்திக்கவுள்ளதுடன் அதன் ஒரு  பகுதியாக பிரித்தானியா வாழ் இலங்கையரையும் சந்தித்துள்ளார்.

பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டிருந்த துக்ககாலம் நிறைவுற்றதையடுத்து அந்நாட்டில் வசிக்கும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மக்களை ஸ்கொட்லாந்து எடின்ப்ரோவில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், இலங்கையர்கள், நேபாளிகள், பூட்டானியர்கள் மற்றும் மாலைத்தீவினர் என 200- 300 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் என்று பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தேசிய சுகாதார சேவை முதல் கலை, ஊடகம், கல்வி, வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் வரை பிரிட்டன் வாழ்க்கையில் தெற்காசிய சமூகத்தினர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image