புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 'மனுசவி' ஓய்வூதியத் திட்டம்
பல தசாப்தங்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் கோரி வரும் ஓய்வூதிய முறையை இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் பங்களிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
``மனுசவி'' ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம், புலம்பெயர் தொழிலாளியின் வயது மற்றும் பங்களிப்புத் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
தேவையைப் பொறுத்து, அதிக மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற தேவையான பங்களிப்பையும் வழங்கலாம். தற்போது, வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் எவரும் ஓய்வூதியத்தில் பங்களிக்கத் தொடங்கலாம்.
மனுசவி ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார மற்றும் பெண்கள், சிறுவர் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.