ஜப்பானில் பணியாற்ற விரும்புவோருக்கு இலவச பயிற்சி

ஜப்பானில் பணியாற்ற விரும்புவோருக்கு இலவச பயிற்சி

ஜப்பானில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்த்துள்ளோருக்கான பயிற்சி நெறிகளை வழங்க இலங்கை தொழில்பயிற்சி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, தாதியர், முதியோர் பராமரிப்பாளர்கள் பயிற்சிகள் தொழிற்பயிற்சி அதிகாரசபையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த பயிற்சி நெறியை தொடங்குவதற்கான அடிப்படை தகைமையாக ஏற்கனவே ஜப்பான் மொழி கற்றிருப்பது கட்டாயம் என்பதுடன் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இம்மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த பயிற்சி நெறியானது, காலி, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், கண்டி, குருநாகலை ஆகிய மாவட்டங்களில் வழங்கப்படவுள்ளது. இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சியானது 6 மாதங்களுக்கு, 500 மணித்தியாலங்கள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களை பெற 011 7277 888/ 011 7270270 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது 070 676 7696 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image