புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலரில் வீழ்ச்சி

புலம்பெயர் தொழிலாளர்கள்  அனுப்பும் டொலரில் வீழ்ச்சி

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு மாதாந்தம் அனுப்பும் பணம் 250 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அந்நிய செலாவணியை அதிகரித்துக்கொள்ளும் கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்று வௌிவிவகார அமைச்சின் மேலதிக முகாமையாளர் மங்கள ரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது என்றும் வங்கிகளினூடாக நாட்டுக்கு டொலர்களை அனுப்பும் இலங்கையர்களுக்கு பல நன்மைகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image