உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சு கவனம்

உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சு கவனம்

உக்ரேன் - போலாந்து எல்லை வழியாக இரு மாணவர்கள் உட்பட 40 இலங்கையர்கள் வௌியேற்றும் பணிகளில் வர்சோவ் மற்றும் அன்காரா ஆகிய பிரதேசங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஈடுபட்டுள்ளநிலையில் உக்ரேன் நிலை தொடர்பில் இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று வௌிவிகார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டை ​விட்டு வௌியேற்றும் செயற்பாட்டை இலகுபடுத்துவதற்காக வர்சாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் வளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அங்காரா மற்றும் வார்சாவில் உள்ள இலங்கை தூதுவர்கள் உக்ரேனை விட்டு வௌியேறும் இலங்கை பிரஜைகளுடன் தொடர்ந்தும் நெருக்கமான தொடர்பை பேணி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கும் இலங்கைக்குத் திரும்புவதற்கும் அவசியமான வழிவகை செய்து வருகின்றனர் என்றும் வௌிவிகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் உக்ரேனுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நிலையையும் அமைச்சு கண்காணித்து வருகிறது. . இலங்கையின் அங்கீகாரம் பெற்ற தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தொடர்புடைய தூதரகங்கள் மற்றும் இலங்கை பிரஜைகளுடன் தொடர்பில் உள்ளன.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், பெலாரஸில் உள்ள எட்டு (08) பல்கலைக்கழகங்கள் / உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் 1,556 மாணவர்கள் உட்பட, ஏறத்தாழ 1,600 இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பைப் பேணுகிறது.

மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதுவர், இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர் மற்றும் பெற்றோர் குழுக்களுடன், பெலாரஸில் உள்ள பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளார். அவசியமானதாகக் கருதப்படும்போது, புதிய நிலைமைகள் தொடர்பில் தகவல்கள் பெற்றோருக்கு வழங்கப்படுகின்றன என்றும் வௌிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் உள்ள இலங்கை பிரஜைகள் சம்பந்தப்பட்ட இலங்கை தூதரகங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்குமாறும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image