அவுஸ்திரேலியாவில் கற்றலை மேற்கொள்ளும் நோக்கில் வருகைத் தரும் சர்வதேச மாணவர்கள் மற்றும் working holiday வீசா கட்டணத்தை குறைக்க ஆஸி. அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஒமிக்ரோன் பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள ஊழியர் தட்டுப்பாட்டை கவனத்திற்கொண்டு நாட்டுக்கு வௌிநாட்டவர்கள் வருகைத் தருவதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.