வௌிநாட்டு பெண்களை நாடும் எண்ணிக்கை 2022 இல் அதிகரிப்பு - பணியகம்
வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்லும் பெண்களின் எண்ணிக்கை 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டு மிக வேகமாக அதிகரித்துள்ளமையை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதேவேளை, ஆண்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பினை நாடு செல்லும் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அத்துடன் வௌிநாட்டு வேலைவாய்ப்பினை நாடிச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் வீட்டுப் பணிப்பெண்களாகவே செல்கின்றனர். ஆண்கள் திறன்சார் தொழில்களை நாடிச் செல்கின்றனர்.
வௌிநாடு செல்லும் பெண்களில் 60 வீதமானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக செல்கின்றனர் என்றும் 30 வீதமானவர்கள் குறைந்த திறன்சார் தொழில்களை நாடிச் செல்கின்றனர் என்றும் 1.08 வீதமானவர்கள் மத்திய நிலை திறன் கொண்ட பணிகளிலும் 1.18 வீதமானவர்கள் தொழில்முறை தொழில்களை நாடியும் செல்கின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் 2 அலுவலக சார் தொழில்களிலும் 5 வீதமானவர்கள் திறன்சார் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் பணியகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
Graphic from Daily mirror