ஜோர்தான் செல்லும் தொழிலாளர்களுக்கு காப்புறுதிக் கொள்கை அறிமுகம்

ஜோர்தான் செல்லும் தொழிலாளர்களுக்கு காப்புறுதிக் கொள்கை அறிமுகம்

வீட்டு வேலைக்காக ஜோர்தான் செல்லும் தொழிலாளர்களுக்காக புதிய காப்புறுதிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் கீழ் பணி ஒப்பந்த காலத்தில், குறித்த தொழிலாளர் உயிரிழந்தால் அல்லது அவசர விபத்துகளால் நிரந்தர ஊனமுற்றால் இழப்பீடு வழங்கப்படும்.

இது தவிர மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் COVID போன்ற தொற்றுநோய்களுக்கும் இந்த காப்புறுதி மூலம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image