புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

வௌிநாடுகளில் பணியாற்றும்,  வௌிநாடுகளில் பணிபுரிந்து மீள நாடு திரும்பியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று (31) ஜைக் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

குறித்த பிரச்சினை தொடர்பில் தேசிய மட்டத்தில் ஆலோசனைகளுக்கு தயாராகும் வகையில் மாவட்ட மட்ட குழுக்களான புலம்பெயர்ந்தோர் குழுக்கள் (Voice of Migrants - VoM) , தேசிய அளவில் குரல் கொடுக்கும் சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினைகளின் போது நேரடியாக தலையிடக்கூடிய தேசிய ஒன்றியமொன்றை அமைப்பதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு சிவில் மற்றும் தொழிற்சங்க கூட்டாக இணைந்து தேசிய மட்டத்திலும் சமூக மட்டத்திலும் அழுத்தங்களை கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் எதிர்கால செயற்பாடுகள், வௌிநாடுகளில் பணியாற்றி மீள நாடு திரும்பும் இலங்கையர்களின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்புதலுக்காக தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் தொடர்ச்சியாக வழங்கவேண்டிய பங்களிப்புத் தொடர்பில் இதன்போது ஆழமாக ஆராயப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட சில மாவட்டங்களில் நடத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான ஆய்வினூடாக பெறப்பட்ட தகவல்களினூடாக மாவட்ட மட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொடர்ச்சியாக செயற்பட்டு அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களின் பிச்சினைகள், எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கவனம் செலுத்துவது மாத்திரமன்றி அவர்களின் வாழ்வை மீள கட்டியெழுப்புவதற்காக தேசிய ஒன்றியம் என்ற ரீதியல் அனைவரும் இணைந்து மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VoM 2

VoM 3

VoM 4

VoM 5

VoM 6

VoM 8

VoM 9

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image