பெலாரஸ் - லித்துவேனியா எல்லைப் பகுதியில் 29 வயது இலங்கையர் ஒருவருடைய சடலம் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 5 ம் திகதி அடையாளங்காணப்பட்ட இந்நபரின் சடலத்துடன் காணப்பட்ட கையடக்கத் தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்கள் என்பன அவர் இலங்கையர் என்பதை உறுதிப்படுதியதாகவும் லித்துவேனியாவின் எல்லையில் இருந்த 500 மீற்றர் தொலைவில் உள்ள புதரில் குறித்த நபரின் சடலம் காணப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல தடவைகள் சட்டவிரோதமாக பெலாரஸ் எல்லையை கடக்க முயன்று அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டவர் விசாரணை நடத்தப்பட்டு வந்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று போலொட்ஸ் எல்லைப் பாதுகாப்புக் குழவின் பேசவல்ல அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபருடைய மரணத்திற்கான காரணத்தை அறிவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தடவியல் மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.