சினோபாம் செலுத்தியவர்கள் பூஸ்டராக பைசர்- கட்டார், சவுதி அறிவிப்பு

சினோபாம் செலுத்தியவர்கள் பூஸ்டராக பைசர்- கட்டார், சவுதி அறிவிப்பு

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் (Dose) செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வர முடியும் என்று கட்டார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் பைசர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு இதுவரை 20,000 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 8,000 பேருக்கு முதற்கட்டமாக வைபசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனையோருக்கு வழங்குவதற்கான பைசர் தடுப்பூசிகளை பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

வௌிநாடு செல்லும் நோக்கில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக பணியகத்தில் பதிவு செய்துகொண்வர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று (08) நாராஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பமாகியது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image